சன்மார்க்கி,
இன்று புதுவருடம்! நீயோ எந்த வருடத்தினும் மிகவும் புதியவன்!
காலம் முழுதும் புதியவன்! பொன் மய வாழ்வோ உன்னிடம்!
உன்னை வாழ்த்த வார்த்தை எது? வள்ளல் தந்த வாழ்வில் குறையேது?
நிறைவாழ்வில் நிலைத்திருந்து, சன்மார்க்கம் பறைசாற்று!
சன்மார்க்கம் உலகெங்கும் ஒளியூட்டும் உண்மைசொல்லு!
வள்ளலின் வழியிலே தெள்ளிய நடைபோடு!
வாழும் கலையை சகஉரிமையில் யாவருக்கும் கொடு!
அருட் பெரும்ஜோதி! அருட் பெரும்ஜோதி!
தனிப் பெரும்கருணை ! அருட் பெரும்ஜோதி !
பாலு குருசுவாமி.
Write a comment