ஞான சரியை விளக்க உரை
மரணமிலாப் பெருவாழ்வு.
சரவணானந்தா
திண்டுக்கல்.
தயவு
ஞான சரியை: ஞான உரை
இஃது
திரு அருட்பா ஆறாம் திருமுறையில்
அமையப் பெற்ற
நிறை இன்ப வாழ்வு தரும்
பாமாலை விளக்க நூல்
ஸ்ரீ முக ஆண்டு தைத்திங்கள்
14-ம் தினம் குருவாரம்
தைப்பூச விழா
(27-1-’94)
முதற்பதிப்பு 1975
இரண்டாம் பதிப்பு 1994
பதிப்பு-உரிமை
பிரதிகள் 2000
வெளியீடு:
தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை,
தயவு சத்திய ஞான கோட்டம்,
4, நாகசாமி அய்யர் சந்து,
திண்டுக்கல்-624 001.
அச்சிட்டோர்:
சாம் அச்சகம்,
20, அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை-1.
தயவு
சத்திய வாக்கும் நித்திய வாழ்வும்
முகவுரை
ஞானசரியை என்றும் வாய்ப்பறையார்த்தல் என்றும், மரணமிலாப் பெருவாழ்வு என்றும் கூறப்படும் திருஅருட்பாவின் அக உண்மையை வழங்க உள்ளது இந்தச் சிறிய நூல்.
இதனை, அகநின்று அனகமாக நோக்கும்போது, இறை உண்மை நிறை வாழ்வு தரும் ஒன்றாகக் கண்டு கொள்ளலாகும். ஆகவேதான் இதற்கு இம்முகவுரை கொடுக்கப்பட்டுள்ளது.
நித்திய பரம்பொருளளைகிய இறையின் இயல் விளக்க நிறை உண்மை கொண்ட ஒரு சொல் தான் ஓம் என ஆன்றோர் வழி உலகம் கண்டு ஏற்று உள்ளது. இது, என்றும் அகல் வான்வெளி முற்றும் சதாஒலித்துக் கொண்டே யாவையும் ஆக்கிக் காத்து அழித்தும் வருகின்றது.
இம் முச்செயல் உண்மையைக் குறிக்க, அ,உ,ம் என்ற மூ ஒலிக்கூட்டடே ஓம் ஆகியுள்ளது என அருள் உணர்வால் கண்டிருந்தனர். இதனால் இந்த ஓங்கார மந்திரத்தின் அகப்பொருள் அருள் என்றே கொண்டனர். அது உடல், உயிர் உள்ùளளைளி லையை உணர்த்தி, அதுவாகிடச் செய்தது அந்நாள் பக்குவ மனிதனை!
அதுவா இறை மந்திரம் அருளும் நிளை அனுபவ நிலை? ஆம், எனக் கொண்டு அகம் சூழ்ந்து போனான் அன்றைய ஞானி. ஆனால், அம் மந்திர ஒலியோ இடையறாது என்றும் ஒலித்துக் கொண்டே, முத்தொழில் புரிந்து வருகின்றதை அறிகின்றோம்.
ஆகையால், அருள் தந்த பொருள், நித்தியமான ஒன்றாய் இருக்கவேண்டும். அந்த நித்திய வாழ்வு தரும் பொருள், அருள் நிலையாய் இருக்க முடியாது, வேறு ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என அவ் அருúள உணர்த்துகின்றது! அது, அவ்வருள் நிலையிலிருந்து சதா வெளியாகிக் கொண்டே இருக்கும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என உணர்த்தப் பெறுகின்றோம் இன்று!
ஓம் மந்திர உள்ùளளைளி நிலை ம் எனவும் அதினின்றே உகர, அலைகள் சதா வெளியாகிக் கொண்டிருத்தலின், ஓங்கார மந்திரமும், அதன் முத்தொழிற் செயல்களும் வெளியாகிக் கொண்டே இருத்தல் நித்தியமேயாம்.
அப்படி அகமிருந்து அனகமாக வெளிவந்து விளங்கிடும் பொருள் கொண்ட ஒரு சொல் தயவு ஆன ஒன்றே ஆம். ம் எனும் மகரமெய்யே தகராகாச இறை ஜோதிப் பெருவடிவமாகும், அது மனிதனின் தலை நடு, யகர ஆன்ம ஒளியாய்த் தோற்றி உகர உயிர் உடம்பு கொண்டு திகழ்கின்றதாம். ஆகையால், ஓங்கார மந்திர அனக தயவு மூலம் மனிதன் நித்திய வாழ்வு பெறுவது நிச்சயமே!
இவ்வுண்மையையுணர்த்தி, அனுபவ வாழ்வு பெறச் செய்யும் நோக்கோடு தான், திரிதேக சித்தி பெற்ற வள்ளல் அருட்பிரகாசர், திருஅருட்பாவில் இந்தப் பாமாலையை அந்தாதி முறையில் அருளி சுழன்றிலங்கச் செய்துள்ளளைர். ஆகவே, இதனை இருபொருள் அனுபவமும் உண்டாக உள்ளுணர்ந்து ஓதிப் பயன் கொள்ள வேண்டும்.
முதலில் சத்விசாரத்தால் ஓங்கார அகப்பொருளை அருட்பெருஞ் ஜோதியாகத் தலைநடுவுள்ùளளைளியாகக் கண்டு அதுவாகி நிற்க வேண்டும். அந்நிலை நின்றே தயவினால் தினசரி வாழ்வை நடத்தப் பழகல்வேண்டுவது அவசியம்.
கடவுள் உண்மைதான், நம் சிரநடுவுள் சிற்றம்பல ஜோதியாகவும், பிற எல்லாத் தெய்வ, தெய்வீக மனித உண்மையாகவும் கண்டு கண்டு, போற்றி, உட்கூடி நின்று தயை பெருகப் பெருக வாழ்தல் வேண்டும்.
வேறு வேறான புறச் சந்நிதிகளிலே, கற்பனா தெய்வப் பீடங்களின் முன் நின்று முறையிடுவதாலும், தோத்தரிப்பதாலும், வேண்டிக் கொள்ளுவதாலும் பெற முடியாத உண்மைவிளக்கமும், அனுபவமும் அகஜோதிபதியிடமிருந்து அடைந்திடலாகும்.
வடலூர் வள்ளல், சத்திய ஞானத்தால் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு, ஆனந்தத் தெள்ளமுதுண்டு தான் சூழ இருக்கும் ஆன்ம நேயர்களை எல்லாம் மிக உறுக்கத்தோடும், உறுதியோடும் இங்கே வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார். இங்கே என்றால் எங்கே? புற வடலூருக்கா, அல்ல! சத்திய ஞானம் விளங்கும் தலை இடத்திற்கு! அங்கு தான் அவரும், அருட்ஜோதியும் இரண்டற இருக்கும் இடம் ஆம். அது.
தயாவொழுக்கத்தோடு கூடிய சத்விசாரத்தால், அவரையும், அவர் வாழிடத்தையும் கண்டு அடைய முடியும். அப்படி அகமிருந்துதான் மெய்ப்பொருளையும் அனுபவத்தையும் பெறமுடியும்! அனுபவத்தில், வாழ்வில் அடையப் பெறாதது, அர்த்தம் அற்றது, அனர்த்தமே, கேடும் அழிவுமே!
இதில் 28 பாடல்கள் தொடர்ந்து, சுற்றிச் சுற்றி வந்து உயிர் உடம்பைச் சுத்த, பிரணவ, ஞான உடலாக மாற்றித் தயவு அனுபவத்தோடே நிலவச் செய்யும் தன்மைத்தாம். இதனைத் தான் இதனைச் சத்தியவாக்கும், நித்திய வாழ்வும் என்ற தலைப்பு கொடுத்துச் சிறப்பிக்கச் செய்துள்úளளைம்.
முதற் பதிப்பில் தெளிவாகக் கண்டு கொள்ளப்படாது, இருந்த விளக்கம் மிகத் தெளிவாகவும், எடுப்பான தடித்த எழுத்துக்களளைலும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளை மேலெழுந்த வாரியாகப் படிக்கும் போதே உண்மையைக் கண்டு கொள்ளலாம்!
இதன் விளக்கத்தைப் பிறரும் நன்கு அறிந்து ஏற்கப் பன்மொழியிலும் வெளியிடலாம். அது கொண்டு நம் வள்ளலாரையும், அவரது திருவருட்பாவின் உண்மையையும், அவரது மரணமில்லா வாழ்வின் சாத்தியப் பேறையும் உலகம் எல்லாம் அறிந்து பெரும் பயன் அடையலாகும்.
பழம் கற்பனா நெறிமுறைகளளைல், உலகம் சீர்கெட்டு அழிகின்ற நிலை மாறி, தயா ஒளி பெற்று இன்பில் தழைத்தோங்கும் என்பது சத்தியம்.
விளைக தனிப் பெருந் தயவு
தயவு இவண்
சத்திய ஞான கோட்டம் தயாநேயன்
திண்டுக்கல்
20-1-94 சரவணானந்தா
தயவு
ஞான சரியை
தலைப்பு விளக்கம்
அன்பு ஒளிரும் ஆறறிவு நிரம்பிய மனிதர்களளைய் விளங்கும் யாவரும் நல்லின்ப வாழ்வு பெற்று, ஒத்து வாழ வேண்டும். இதுவே இறைவன் திருவுள்ளம் என உண்மை மெய்ஞ்ஞானிகள் ஓதுகின்றார்கள்.
இவ்வுலகில், அந்த இறை இன்ப வாழ்வு வருவித்தற் பொருட்டு, பல்வேறு கொள்கை கோட்பாடுகள், பலப் பலரால் வகுத்து வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் உண்மையைக் கொண்ட ஆன்ம ஞானிகள் தந்துள்ள “சன்மார்க்க ஞான நெறியே” யாவர்க்கும் பயன்படுவதாக உள்ளதாம். இந்த ஞானத்தில் கடவுள் விளக்கம் அகத்தில் கண்டு, புற வாழ்வில் விரித்துக் கொள்ளப் படுகின்றதாம்.
மேற்படி ஞான பக்குவம் வருவதற்கும், முடிந்த அனுபவம் உண்டாவதற்கும், நான்கு நான்கு படிகள் கொண்ட நான்கு நிலைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
அவை, “சரியை, கிரியை, யோகம், ஞானம்” என்ற நான்கு நிலைகளும், அவற்றில் ஒவ்வொன்றிலும், இந்த நான்கும் பயின்று வர
சரியையில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
கிரியையில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
யோகத்தில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
ஞானத்தில் - சரியை, கிரியை, யோகம், ஞானம் :
என்பனவாம்.
1. சரியை:- உலக வாழ்வில் திருத் தொண்டு புரிதல் நல்ல சரியை யாம். பக்தி நெறியாளர் கோவிற் பணியே இதுவாகக் கொள்கின்றனர். “உண்மைக் கடவுளுக்கு உயிருடம்பே ஆலயமாய்” இருப்பதால் “ஆருயிர்த் தொண்டே அருஞ் சரியை” என்று கொள்ள வேண்டும்.
2. கிரியை:- இது போல் தெய்வ ஆராதனை “உயிர் விளக்கம் செய்தல் ஒன்றே” ஆதலின் அதுவே நற்கிரியையாகக் கொள்ளப்படும்.
3. யோகம்:- மேல், நல்லொழுக்கத்துடன் இருந்து அருட்சக்தியைப் பெறுவதே மெய் யோகமாக அமைவதாம்.
4. ஞானம்:- “அந்த அருளளைலே உண்மைக் கடவுள் ஒளியில் பொருந்தி நின்று உலவா இன்பில் வாழ்வதே ஞானப்பயனாம்”
இந்த நான்கு நிலையில் முறையாகப் பயின்றால், “சாலோக, சாமீப, சாரூப சாயுச்சிய நிலை” அடையலாம் என்பர். உண்மையான அருட் பெரும்பதியை உணர்ந்து, அடைந்து அத்துவிதானந்த வாழ்வு பெற வேண்டியது ஒன்றே நம் குறிக்கோளளைக உள்ளதால், மேற்படி சாதனா சாத்தியம் உண்டாக, யாவரும் வாழ்க்கை நடத்த வேண்டும். “சாதனா முறை சத்விசாரத்தாலும், சாத்தியமுறை பரோபகாரத்தாலும் சித்திப்பதாக உள்ளனவாம்.
“ஜீவ தயா ஒழுக்கத்தோடு சத்விசாரம் செய்தால், நாம் நான்காவது ஆகிய ஞான நிலையில் இருந்து கொண்டு, சாதனை புரிகின்றதாக உணர்ந்து கொள்வோம். இதுவே “ஞானசரியா” நிலையாம். இந்த நிலையிலிருந்து உலகியலை நடத்த, நடத்த, மெய்யன்பும், மெய்யறிவும் விளைவு கொள்ளும். இந் நிலையிலிருந்தேத ஞானகிரியையும், ஞான யோகமும் சத்விசாரப் பயனாக விளைவு கொள்ளும். பின், சுத்த தயா அனுபவத்தால் ஞானஞானமாகிய பேரின்ப நில சாத்தியமாகும்”
இங்கு, நம் வள்ளல் பெருமான், ஞானசரியை என்ற தலைப்பை எடுத்துக் கொண்டு, சுத்த சன்மார்க்கத்தின் முதற் கூறாகிய “சாதனா விளக்கம்” நன்கு அருள்கின்றார். இதில் சத்விசார நிலையும், இயலும், பயனும் தெள்ளத் தெளிய விரிக்கப்படுகின்றனவாம்.
புற நெறியாளர் இதுவரை காணா, அனக நெறியுண்மை நன்கு எடுத்து ஓத வந்தது இப்பகுதி. நாம், தயா வண்ணராம் பதியை முதலாகக் கொண்டு தோன்றியுள்ளவர்கள். அந்தப் பதியை அனுபவத்தில் கொண்டு வாழ்வதற்கும் சுத்த தயவே நெறியாகக் கொண்டு சூழ வேண்டுவது நம் கடமையாம்.
இந்த நம் ஆன்மா, எட்டோடு இரண்டு சேர்ந்த பத்தின் (அ8 + உ2 - ய : 10) உருவாய் உள்ளது எனப்படும். இதில் எட்டு அகர எழுத்தாகி, கடவுள் உண்மை வடிவாக உள்ளதாய் மொழியப்படும். அத்தோடு உள்ள இரண்டு உகரமாய்த் திகழ்ந்து, அருள் உணர்வாய் விளைந்து அகர பதியைக் கண்டு கொள்வதாம். இது தான் யகரம் சுட்ட வந்த கடவுளளைன்ம உண்மை என்ப.
இந்த ஞான சரியைப் பகுதியில் மேற்படி ஆன்மக் கடவுள் அனபவம் பெறப்பட வேண்டியுள்ளதால் “அருள் துணையே” முதலில் நாடப்படுகின்றது. அருளைக் கொண்டு அறிந்தடைதல் முறையே. தாயைக் கொண்டு தந்தையை அறிந்து கொள்வது போல்வதாம்.
இங்கு உகரமும், அகரமும் வரிசைப்படுத்தி நிறுத்திய போது உஅ(28) 28 ஆக விளங்கக் காண்கின்றோம். இவ்விருபத்தெட்டுமே இந்த ஞானசரியைக்கு 28 செய்யுள் வகுக்கப்படக் காரணமாய் அமைந்தன. மேலும் இவ்விருபத்தெட்டு செய்யுட்களும், அந்தாதி முறையில் அணிபெற கோவை செய்து வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு பாவும், எண்சீர் அடியான் வந்து எட்டாகிய அகர பதியின் இலட்சணத்தை ஞான சரியாதி நான்கினும் கண்டு கொள்ள உதவுகின்றன. அன்றியும், இருபத்தெட்டு என்று கூறும் போது, இரண்டு (பத்து) எட்டு என்று ஒலி வடிவில் மட்டும் காண்கின்றோம். இது நம் தமிழ் முறையில் (உயஅ) முன்பும் வழக்கில் இருந்து வந்ததே யாம்.
ஆன்ம ஞானம் விளங்கிய காலம் அதுவாக இருந்ததால், அப்படி யகரமாகிய ஆன்ம எழுத்தெண் வெளிப்படக் குறிக்கப்பட்டதோ, என எண்ணத் தோன்றுகின்றது. அதே காரண நிமித்தம் இன்று, அவ்வான்ம ஞானம் மறைந்து கிடத்தலின், இந்த இருபத்தெட்டின் இடை நின்ற பத்து (ய) இல்லை யாம்படி ஆயிற்று போலும்!
மேலும், கடவுள் உள்ளதாக மறைந்து இருக்கின்றதால், அதனை எடுத்துக் கூற (வந்த) முயன்ற ஞான நூலை மறை என இயம்பினர் போலும். அந்த மறையில் மறைந்து கிடக்கும் மறை பொருளளைகிய அக் கடவுளை அறிந்து அடைவதற்கு உரை நூலாக செய்யப்பட்டன, ஆகமங்கள்.
செம்பொருட் சிவபதியைக் காட்டி கூட்டி வைக்கும் சைவ ஆகமங்கள் இருபத்தெட்டே என்பர். அவ்வாகமங்கள் ஒவ்வொன்றும் பெரும் கலை ஞானப் பெட்டகங்களளைய் இருப்பனவாம். அக்கலை ஞானங்களை ஓர்ந்து பற்றி பயன் காண்பது எளிதல்ல.
இவற்றிற்காக வேண்டி, எத்தனை, எத்தனை கலைக்கூடங்கள், சிற்ப ஆலயங்கள், குரு பீடங்கள், சந்நிதானங்கள். அவற்றிற்கான நூல் முதலியனவும், விக்கிரகங்கள் முதலியனவும், குரு மகா சன்னிதானங்களும், ஆசிரியர்களும் தோன்றியுள்ளளைர்கள்.
இவைகளளைலும், இவர்களளைலும் பன்னெடுங்காலம் பயிற்றுவிக்கப்பட்டும், கடைபிடித்து ஒழுக விதிக்கப்பட்டும் அந்த மாமறைச் ஜோதியினைக் கண்டு அடைவது அருமையாய் இருக்கின்றதாம்.
ஏனெனில், இவ்வாகம வழியில் சென்றவர்கள் கடின பாடுபட்டு உழைத்துக் கண்ட பயன் அற்பமாய்ப் புறத்ததாய் நின்றுவிட்டதாம். புற பக்தி வழிப்பாட்டிற்காம் பலவாகிய, தந்திர, மந்திர, சாஸ்திர, ஸ்தோத்திர நூல்கள் பெருகின. அதனால் அப்படியாக நேர்ந்ததாம்.
அகவுண்மையைக் வற வந்த யோக ஞான கலைகளும் கூட மனிதனை, அகத்தில் மூழ்கடித்து விட்டனவே, என் செய்வது! அவை புறத்தில் ஓரளவு சிறப்பொடு வாழ்வித்தன, சிறிது காலம். பின்னர் ஒடுக்கி விட்டனவாம்.
“ஆகம நெறியிற் கண்ட உண்மை பூர்ணமாக வெளிப்பட்டு பயன் வழங்கவில்லை.” ஏகதேச வெளிப்பாட்டால் ஏகதேசச் சித்தி நலன் காணப்பட்டது உண்மையே. ஆனால், அந்த ஆகம நெறி உலகப் பொது நெறியாகக் கூடாது போயது. ஏனெனில் அது, அகமிருக்கும் ஒன்றான உண்மையிலிருந்து அனகமுற விரியவில்லை; புறச் சூழலால் பலவாகத் தோன்றி, ஒன்றான நிலை பேறு அறியக் கூடாது மறைந்ததாம்.
இது சமயம் “சுத்த சன்மார்க்க அனக நெறி” தோன்றி உள்ளதால், மறையாகமம் வழங்கற்கரிய மாண்பொருள் நம் கைவரப் பெறுவோமாக. அதற்கென்றே நம் அருட் பிரகாச வள்ளல் பெருமான், வேதத்தின் அந்தமும், ஆகமாந்தமும் உரைத்ததற்கரிய அனுபவ அருட்பெரும் பொருளை இந்த ஞானசரியை மாலையில் இருபத்தெட்டு அருட்ஜோதி மணிகளளைகப் பதித்து ஒளிர வைத்துள்ளளைர்.
எவரும், சமயச் மதச் சார்பு கொண்டு நோக்காது அருட்பெரும் பதியை உள்ளவாறு கண்டடையும் நோக்கோடு இம்மாலையை பன்முறை நன்முறையில் ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓத ஓத ஒருமை உண்டாம். அந்த ஒருமையில் தயா நெகிழ்வும் தோன்றும் போது உண்மை எல்லாம் விளங்கும். ஞானசரியை இது தான் என உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்.
இதில் அடங்கிய இருபத்தெட்டு பாடல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு விளக்கம் செய்ய முற்படுவோம். “இங்கு குறிக்கப்பட உள்ளது புறச் சான்றுகள் பல கொண்ட விரிவான உரைகளளைகா.” அஃது கலை அறிஞர் ஏராளமாய்த் தருவார்கள். அவற்றால் நமக்கு அக உண்மை சிறிதும் விளங்காது. பெருநன்மையும் உண்டாகாது.
“அருள் வேண்டும் நமக்கு. அவ்வருள் கொண்டு காண அகச்சான்று போதுமானது வழங்கப் பெறுகின்றோம்.” இந்த அனக மாலையிலும், மற்ற நம் வள்ளல் தந்துள்ள பாக்களிலும், நம் ஒவ்வொருவருடைய அகத்திலுமே ஒளிர்கின்றது உண்மையான அகச்சான்று அந்த ஒப்பற்ற அகச்சான்றாம் தயா பெருஞ் ஜோதியை ஒன்றி நின்று தான், இங்கு இச் செய்யுட்களுக்கு மெய்ப் பொருள் காணலாகின்றதாம்.
ஆதலின் இவ்வுரைத் துணையால் கடவுள் தயவும் அத் தயவால் “அனகானந்த அனுபவமும்” பெற்றுக் கொள்வீர்கள். பொருள் விளக்கம் எளிதாகக் காணலாம். கண்டு கொண்டால் “திருஅருட்பாவின் இதயம் இதுவே” எனவும் தெளிந்து கொள்ளலாம். உலகுக்கு ஆண்டவர் அருள் வெளிப்படுகின்ற சமயம் அடுத்துள்ளது.
வாய்ப்பறை ஆர்த்தல்
ஒரு செய்தியை உலகுக்குத் தெரிவிக்க வேண்டின், விளம்பரம் அவசியமாம். பறை அடித்துக் கூறுதல் பழமுறை. கற்றார்க்கும் கல்லாதார்க்கும் எளிதில் தெரியப்படுத்த, அம்முறை அக்காலத்தில் பொருத்தமாகவே இருந்ததாம். இக்காலத்தில், ஒலி பெருக்கி முதலிய சாதனங்கள், முக்கிய சங்கதிகளை உலகுக்கு அதி விரைவில் தெரியப்படுத்தி விடுகின்றன. இன்னும் எளிதில் மொழி அறியார்க்கும் தெரியப்படுத்தும் வண்ணம் தொலைக்காட்சி (பங்ப்ங்ஸ்ண்ள்ண்ர்ய்) உதவ உள்ளது.
இவ்வளவாலும் அறியப்பட உள்ளவை புற விஷயங்கúள. உலகியல் சிறு பயன் தருபவைகúள. நமது குறிக்கோள் அகத்திருந்து அனகப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அதனை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்றால், உண்மை உரைப்பதால் ஆம் என்க.
“உண்மை உரை செய்தலாவது, அக ஒளியைப் பரப்புதலாம்”.
திருவாய் மலர்தல் என்பதின் உட்பொருளும் இதுவே. அதிலிருந்து தயவோடு உரைக்கின்ற ஒவ்வொரு சொல்லும், புறப் பரையார்த்து உரைப்பதை விட, வானொலி பரப்புதலை விடச் சக்தி வாய்ந்ததாய் ஒவ்வொருவரின் உள்ளத்தும் பதிக்கப் பெற்று விளங்குவதாய் உள்ளது.
ஆதலின், நம் வள்ளல் வாய்ப்பறை ஆர்த்த இப் பாமொழிகள் உலகோர் எல்லோர் உள்ளத்தும் பரப்பப்பட்டு, பதிவு செய்யப்பட்டு என்றென்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றதாகும்.
“ஒருமையும் தயவும் கொண்டு தளியில் உற்றுப் பார்த்தால், இந்தச் செய்யுள்களையும், இவற்றால் சுட்டாமல் சுட்டுப்படுகின்ற கடவுளையும் கண்டு கொள்ளலாம். வாய்ப்பறையின் உண்மை இதுவாம்”.
இதுவன்றிப் புலனெறியாளர் தம் வாய்ப்பறை சிறப்பற்றதாம். அவர்கள் தம் வாயே பறையாக, நாக்கடிப்பால் ஆரவாரஞ் செய்து ஒலிப்பனவற்றால் பெரும்பயன் உண்டாக மாட்டா என அறிதல் வேண்டும்.
அருட் பெரும் பயனை அடைவித்தற் பொருட்டே, நம் வள்ளல் வாய்ப்பறை யார்த்தார், ஆர்க்கின்றார், என்றும் ஆர்ப்பார். உள்ளப் பொறியில் தயாஒளி உருவாய்ப் பாவின் பொருளளைய் நம் பதியே ஒளிர்கின்றார். இக்காட்சி, கண்ணால் காணவல்ல புலக்காட்சி அன்று. தயா ஞானமாகிய கண்ணால் மெய்ப்படக் காண வேண்டி உள்ளதாம்.
“இந்தக் கண் தயா விசாரத்தால் திறக்கப் பெறும். ஆகையால், தயவோடு இருந்து விசாரஞ் செய்வோம். கடவுளிடத்து, உண்மைளை விளக்கி வழங்கும்படி விண்ணப்பித்துக் கொண்டு இருப்போம். அத்தோடு அருட்பாக்களையும் ஒருமையுடன் ஓதிக் கொண்டு வருவோம். அப்படிச் செய்து கொண்டே வந்தால், நம் தயாபதி நம் கண்ணை நன்கு திறப்பித்து அருள்வார். தயவு ஞானக் கண்ணைத் திறப்பித்து உண்மையை எல்லாம் கண்டு கொள்ளவும் செய்வார்”.
இப்படியாகத்தான் இந்த ஞானசரியைப் பாடல்களின் பொருளைத் தெரிந்து தெளிதல் வேண்டி உள்ளதாகும். இந்த நிலையிலிருந்து கொண்டு காணும் மெய்ப்பொருள், புலனெறியில் பயின்றுள்ளவர்களுக்கு ஏகதேசப் புற வண்ணமாகத் தோன்றுவது அன்றி, அக உண்மை வண்ணமாகக் கண்டு கொள்ள முடிகின்றதில்லை. எங்கும் தயா பெருஞ்ஜோதியாய், அகமிருந்து, அனக நிறைவாய் உள்ள கடவுளை புறத்தில் எப்படிக் காண முடியும்?
“புறத்தில் காண்ப தெல்லாம் அந்தக்
கடவுளின் மிகச்சிறு சிறு கூறே யல்லாமல்
பூரணம் அல்லவாம்”
ஆதலின், அப் பூரணப் பொருளை அருளளைலே அகத்தில் கண்டு கொள்ளுவோம். அதனோடு கலந்து ஒன்றி நின்று இந்த ஞான சரியா மாலையை நுண்ணிதாகத் துருவிப் பேசப்படாப் பொருளை உளம் கொண்டு மகிழ்வோமாக.
பா விளக்கம்
ஞான சரியை - செய்யுள்:
பாடல்.1
. நினைந்துநினைந் துணர்ந்து
நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்
ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே
நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை
நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதுநாம்
வம்மினுல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில்
வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன்
சத்தியம்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில்
புகுந்தருண மிதுவே.
உரை: ‘வம்மின் உலகியலீர்’, என்று உலகிலுள்ள எல்லோரையும் வரவேற்கின்றார். அன்று என்றோ ஓர் நாள், ஏதோ ஓரிடத்தில் இருந்து கொண்டு, உலகில் அப்பொழுது இருந்தவர்களை மட்டுமா வரவேற்றார்?
அல்ல. நித்தியமாக அருட் பெருஞ் ஜோதி விளங்கும் பதிக்கண் இருந்து கொண்டு, அன்றும், இன்றும், என்றும் வரவேற்கின்றார் வரவேற்றுக் கொண்டேயிருக்கின்றார், எக்காலத்தவரையும் எவ்விடத்தவரையும்.
இப்படி எதற்காக எல்லோரையும் வரவேற்றுக் கொண்டேயிருக்கின்றார்? என்றால்.
“மரணமிலாப் பெரு வாழ்வில்
வாழ்ந்திடற்காகத் தான் வரவேற்கின்றார்.”
ஏன் இப்பொழுதே வர வேண்டும் என்கின்றார்? என்றால், “இந்த சந்தர்ப்பத்தில் திருவருளளைல்,
பொற்சபையும், சிற்சபையும் காட்டிக்
கூட்டி வைக்கப்பட உள்ளதால் தான்”.
இவ்விஷயம் முக்காலும் உண்மையானது. புனைந்துரையல்ல, பொய் மொழியல்ல, சத்திய வாசகமேயாம்.
ஆகையால், ஒவ்வொருவரும் இந்த நல்லதொரு வாய்ப்பைத் தவற விடக்கூடாது. ஏனெனில், இது போன்ற பிறிதொரு நல் வாய்ப்பும், சூழ்நிலையும் எவ்விடத்தில், எக்காலத்தில் ஏற்படப் போகின்றதோ? அதற்குள்ளளைக எவ்வளவு அவத்தைகளும் தடைகளும் ஏற்படுமோ? அவையெல்லாம் சொல்லும் தரமன்று.
இந்தச் சமயம் தப்பினால், வரும் பிறப்பில் கூடுமோ? அல்லது இன்னும் எத்தனைப் பிறவிகள் சென்ற பின் சந்தர்ப்பம் உண்டாகுமோ? எனத் தெரியக் கூடாது இருக்கின்றதாலே, இப்படி வலியுறுத்தப்படுகின்றது, இப்போது.
திருவருள் ஆணையும், நமது கடமையும் இதுவாக அறிந்து கொள்ளப்படுகின்றது. இந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுதலே அறிவுடைமை ஆகும்.
முயன்று அடையாது வீண் போதல், அறியாமையே, பேரவத்தையே என்றாலும், நம் பதி தனிப் பெருந்தயவு உடையவர். ஆதலின் எவரையும் தன்னின்ப நிலைக்கு ஏற்றி வைக்காமல் விடார். இப்பொழுது இல்லையானாலும், என்றோ ஒரு நாள் ஒவ்வொருவரையும் மரணமிலாப் பெருவாழ்வில் நிலவச் செய்தே தீருவார்.
இதனை, எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவில் பெற்றேயாக வேண்டும். திருவருள் ஆணையிது. ஆகையால், நாம் ஏன் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டும். இன்னும் தொல்லைப்பட்டுக் கொண்டு இந்தப் பிறவிச் சூழலில் அலமர வேண்டுமா?
“உண்மையான இன்பத்தை, இப்பொழுதே கிடைக்கப் பெற உள்ளதை மறுத்துவிட்டு, பொய்யான புலபோகப் பிழைப்பை, ஏன் இன்னும் தழுவிக் கொண்டிருத்தல் வேண்டும்? அவற்றைப் பற்றற விட்டுவிட்டு அருளம்பலத்திற்கே வம்மின்! வம்மின்!! ”
மேற்குறித்த “அருளம்பலம் எங்கே இருக்கின்றது?
அதனை எப்படிச் சென்று அடைவது?
அடைந்துதான் என்ன செய்வது?
அம்பலத்திற்குச் சென்று சும்மா மீண்டும் திரும்பி வந்து விடுவதா? ”
இவ்வினாக்களுக்கு எல்லாம் சரியான விடை தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா. ஆம், தெரிந்து கொண்டு தான் ஆக வேண்டும்.
அருளம்பலம் உள்ள இடம்
அருள் என்பதே கடவுள் உண்மைத் தன்மை. இது எங்கே விளங்குகிறது? “மனிதப் பிறப்பு ஏற்று, நிரம்பிய பகுத்தறிவு நிலைக்கு மேலேவிளங்கும் ஆன்மாவினிடத்தே வெளிப்பட்டு விளங்குகின்றது”.
இந்த ஆன்மாவில், கடவுள் மறைந்திருந்து கொண்டு அந்த அருள் உண்மையை வெளிப்படுத்த இசைந்துள்ளளைர். ஆகவே, ஆன்மாவே அருளம்பலமாக இருக்கின்றது.
சரி, இந்த அருளம்பலமாகிய ஆன்மா எங்கே உள்ளது? “என்னில், மெய்யறிவுப் பீடமாகிய ஓங்கார மூளையின் மீது, அந்த மெய்யறிவு மயமாகவே மிளிர்கின்றதாகும்.” இந்த மெய்யறிவு ஒளியே அருட் ஜோதியாம்.
இவ்வொளி, ஆன்மாவில் நித்தியமாக இருந்து அருட்பெரு நடனம் புரிந்து கொண்டேயுள்ளது என்றாலும், அகத்தே மறைந்திருந்து கொண்டு, அனகத்தே விரிந்து நிறைந்துள்ள காரணத்தால், புறத்தில் அறிந்து கொள்ளப்படுகின்றதில்லை.
ஆன்ம அகத்திலிருக்கின்ற, அந்த அருட்ஜோதயின் ஐந்தொழிற் செயலாலே, அதனைச் சூழ்ந்து ஓரறிவுத் தேக முதல், ஆறறிவுத் தேகம் வரை எத்தனையோ பிறவிகள் வந்து போய்க் கொண்டேயிருக்கின்றனவாம். அப்படித்தான் இச்சமயம், அந்த ஆன்மாவைச் சூழ இந்த தேகம் வந்து பகுத்தறிவுக்கு மேலே விளங்கும் அந்த அருள் உண்மையைப் புரிந்த கொண்டுள்ளதாம்.
இப்பொழுது அந்த அருட் பெரும்பகுதியின் அருளளைல் அதனையே காண்கின்றோம். அதற்கு நேர் நின்று, புருவ மத்திய இடத்திலிருந்து உள்நோக்கி சிரநடுப் பீடத்தே கண்டு கொள்கின்றோம். சுத்த மன அறிவு மயமாக, இரு கண்ணிடை நின்று ஆன்ளைலயத்தைக் காண்கின்றோம்.
இந்த ஆன்மாலயம் ‘அருளம்பலம்’ எனக் கூறினது ஏன் எனில், அந்த அருள் ஞானம் விளங்கும் இடம் என்பதால் ஆகும். அன்றியும், அம்பலம் என்ற சொல், அம் + பல் + அம் என விளங்கிடலால், அகவுண்மை மிக அறியக் கிடக்கின்றதாம். அ(வு)ம் + பல் + அ(வும்) - அது ஓம் + பல் + ஓம் ஆகும். இதில் ‘ஓம்’ என்றது அருùளன்னும் பொருளுடையதாய், பிரணவ ஜோதி வண்ணமாய் உள்ளதாகும்.
ஓரான்ம அணு எப்போதும் அருட் ஜோதியால் சூழ்ந்தே உள்ளது. இப்படி எப்போதும் ‘ஓம்’ அல்லது ‘அம்’ என்னும் அருட்ஜோதியால் சூழப்பட்டுள்ள ஆன்மா இந்தப் பிறப்பில் இப்பொழுது ‘பல்’ என நடுவிளங்கி நிற்க, ‘அம்’ ஆல் சூழப்பட்டதாய், அம்பலமாகி விளங்கக் காண்கின்றோம்.
“ஆகவே, நமது அருளம்பலம் என்னும் ஆன்மாலயம் சிரநடு ஓங்கார மூளையின் மீது பகர வடிவ பீடத்தின் மேல் லகர மெய்வண்ண திரயோதசாந்த அருள் வெளியாகத் திகழக் கண்டு கொள்ளலாகின்றதாம். முதல் கேள்விக்கு விடையாக அம்பலம் விளங்கும் இடம் இதுவென ஈண்டு விளங்க நேர்ந்ததாம்.”
இனி இரண்டாவதாக, அந்த அம்பலத்தை எப்படி அடைவது, அடைந்து தான் என்ன செய்வது என்பன பற்றி விளக்குவாம்.
இந்த அருள் அம்பலத்திலே நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நித்தியமாக எழுந்தருளி உள்ளளைர். அவரைப் பிறவிடத்தில் காண முடியாது. நம்மிடத்தில், நமது ஒருவர் இடத்தில் இருக்கின்றதே போல், எல்லோருடைய சிர நடுவுள்ளும் இருக்கின்றவர் தானே; என்றால் நமது அகத்தே மெய்யறிவுக்கே விளங்குகின்ற ஒருவராயும் அந்த ஒருவர் தானே, அருட் காரியார்த்தமாகத் தன் பிரதிபிம்பத்தையே பிற பிற இடங்களில் காட்டி, அன்புச் செயல் புரிந்து, அருள் விளக்கம பெற உதவுகின்றவராயுள்ளதால், “நமது அம்பலத்தின் கண்ணே அனுபவ பூர்வமாகக் கண்டு கொள்ள உள்ளளைர் என அறிந்து கொள்ள வேண்டும்.”
“நமது அம்பல நிலையை அடையப் பெறா விட்டால்
அக அனுபவம் வராது”
புற வடிவங்களில் கடவுளிருப்பதாகக் கருதி பாவிப்பதும், புலனின்பம் கருதி உதவுவதும் பந்தத்தையே உண்டு பண்ணும். அதனால் வினைப்பயன் சூழ்ந்து கொண்டே தானிருக்கும்.
ஆகையால், அம்பலத்தரவை அகத்தே கண்டு, அவருடன் கலந்து ஒன்றிடவே வேண்டும். இதன் பொருட்டே, ஆண்டவர் பற்று ஒன்றே நிலைக்கவும் பிற பற்றுகள் யாவும் ஒழியவும், சத்விசாரத்தால், உள் நிலைக்கண் உய்க்கப்படுகின்றது.
அந்த விசார முறையீடு, பதியைப் பற்றியும், அப்பதியின் அன்பாற்றலைப் பற்றியும், அம்பல முன்னிலிருந்து கொண்டு தீவிரமாய் நினைத்தல் வேண்டுமென்பது குறுத்தே.
“நினைந்து, நினைந்து
உணர்ந்து, உணர்ந்து”
எனக் கூறப்பட்டுள்ளதாகும். அங்ஙனம், எல்லாம் வல்ல அன்பு ஜோதியை அம்பலத்தே கண்டு பற்றி நிற்கும் போது, ‘நான்’ என்ற அகங்கார போதம் நழுவிப் போக, நாமே அன்பு ஒளியாய் உட்பெருகுகின்றோம்.
அந்த அன்புணர்ச்சியை உடம்பு முழுவதும் நிறைத்துக் கொள்ள வேண்டுமென்பதே.
‘அன்பே நிறைந்து நிறைந்து,
ஊற்றெழுங்கண்ணீர் அதனால்
உடம்புமுழுவதும் நனைந்து நனைந்து’
எனப்படுகின்றது. அழுகைக் கண்ணீரல்ல ஈண்டு குறிக்கப்படுவது. கண்ணீர் என்றாலே கண்ணீரின் தன்மையாகிய தயவு அல்லது அன்பே.
“தயவினால், அன்பினால், இரக்கத்தினால், அக நெகிழ்ச்சியால் உண்டாகின்ற அனுபவம் இந்தக் கண்ணீராக விளங்கும்.” இந்த உணர்ச்சி உண்டானால் தான் நம் பதி பால் பிரிவற்ற பற்று உண்டாகி நிலைக்கும். அந்தப் பிரியா நிலை வரும் வரை, அந்தச் சந்ததியிலிருந்து,
“அருளமுதே, நன்னிதியே, ஞான நடத்தரசே
என்னுரிமை நாயகனே” என்று தோத்திரம்
பல புரிந்து கொண்டிருத்தலே முறையாகும்.
இப்படி நினைவும், துதியும் மேலும் மேலும் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தால், அந்த அம்பல வாணனை, அம்பலத்திற் கண்டு, ஒன்றி விடலாம். அப்போது ‘நாம்’ என்பது போய் அவரேயாகி வாழலாம்.
2. பாடல்
புகுந்தருண மிதுகண்டீர்
நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழியோர்
பொய்மொழி என்னாதீர்
உகுந்தருண முற்றவரும்
பெற்றவரும் பிறரும்
உடைமைகளு முலகியலு
முற்றதுணை அன்றே
மிகந்தசுவைக் கரும்பேசெங்
கனியேகோற் றேனே
மெய்ப்பயனே கைப்பொருúள
விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே
தயாநிதி கனியே
சத்தியமே என்றுரைமின்
பக்தியொடு பணிந்தே.
நிலையான வாழ்வு விளங்காத புறஉலகில், வீணிற் பிழைத்துக் கொண்டிருக்கின்ற நம்மவர்களுக்கு ஒரு விண்ணப்பம் என்னவெனில், ஆனந்த வாழ்வு விளங்கும் அருட் பேரம்பலத்திலே புகுந்து கொள்வதற்குத் தக்க சமயம் இதுவாக இருக்கின்றது. வந்து கண்டு கொள்ளுங்கள். எனது வார்த்தை உண்மையானது. பொய் என எண்ணி சும்மா இருந்துவிடாதீர்கள்.
இந்த உலகில் நமக்கு உற்ற துணையாக உள்ளது எது என்று அறியாது இருக்கிறீர்கள். உகுந்தருணம் என்றால், வெளிப்படுகின்ற சமயம். அதாவது, பொன், பொருள் முதலியன நிறையப் பெற்று புறஉலகம் மிக மதிக்கின்ற தருணமாம்.
அப்பொழுதுதான், முன்பு எந்தச் சந்தர்ப்பத்திலும் நெருங்கி வந்து உறவு கொண்டாடாதவர்களும் கூட சொந்தம் சொல்லிக் கொண்டு வந்து சூழ்வார்கள், கனி மரம் பழுத்தால் பறவைகள் வந்து கூடுவன போல”.
பொருள் இல்லாதபோது திரும்பிக்கூட பார்க்க மாட்டார், “இந்தப் பொய் உறவினர்கள்”. கைப்பொருள் உண்டாயின் எல்லோரும் வந்து எதிர் கொள்ளுதல் காண்கின்றோம்.
“கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும்
கடல் ஞாலம்” என்பது மெய் உணர்ந்தோர் மொழி. ஆகையால், “இந்த உலகில், பெற்றவர்கள் கூட நமக்கு உற்ற துணை ஆகார் எனில் மற்றவர்களைக் குறித்து என் சொல்வது?
“எவரும் உண்மைத் துணை என
கொள்ளத் தகாரே”
இது போலத்தான் புற உடைமைகள், உலகியற் சுக போகங்கள். எவையும் துணையாக நிற்கா”. ஆகையால் உலகில் எவர் மீதும், எப்பொருளின் மீதும் பற்று கொண்டு உற்ற காலத்தில் உதவாது போதல் கண்டு வருந்தி, கசந்து போவானேன்.
இப்பொழுது முதலே, நமக்கு உற்ற துணையாய், பற்றுவதற்கு உரியதாக உள்ள நம் அருட்பெருஞ்ஜோதியைப் பற்றிக் கொண்டு உய்வோமாக.
இதற்கு, நம் பதிவளர் திருச் சந்நிதியுற்று, பக்திப் பணிவோடு துதித்துக் கொண்டிருப்போம். மிகுந்த “சுவைக் கரும்பே” என்போம். இந்தப் பதியாம் கரும்பினிடத்திருந்து தான், கன்னற் கனியாம் அருட்பெரும் பயன் கிடைக்கப் பெறவுள்úளளைம். ஆதலின், இதனைச் சுவை மிக்க கரும்பெனப் போற்ற நேர்கின்றதாம்.
பின்னர் “செங்கனியாக” கூறப்படுகின்றது செம்மை நிறத்தை மட்டும் குறிப்பதன்று. நல்லியல்பும், சிறந்த தன்மையும் சுட்டப்படுகின்றதாம். இந்த செம்மை என்ற பண்புச் சொல்லால் “செம்பொருளளைகிய நம் பதியை” செங்கனி என்றதன் உண்மையும் உளங்கொள்வவோமாக.
அடுத்து “கோற்றேனே” எனக் கூறினது யாதெனின் கேடற்று விளங்கும் சுத்த சத்துவப் பொருளில் தேன் ஒன்றாகும், அதிலும் கோற்றேன் மிகச் சிறப்புடைத்தாம். கோல்+தேன்-கோற்றேனாம். இது கொம்புத் தேனாகக் கூறப்படும். அன்றியும் கோ-என்ற சொல்லைத் தனித்தெடுத்துப் பொருள் படுத்தும்போது, தெய்வம், கடவுள் என்றே ஆகும். ஆதலின், இது நம் பதியையே சுட்டுவதாகக் கொள்ளலாம்.
இனி, “மெய்ப்பயனே, கைம்பொருúள” என ஓதப்படுகின்றது. “மெய்ப் பயனாவது உண்மைப் பயன் ஆகும். அது, இத்தேகத்தைப் பெற்றதனால், அடையப் பெற வேண்டிய கடவுட் பேறே ஆம்.”
“உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்”.
என்பது ஒளவையின் ஞானோபதேசம்..
அது, இப்பொழுது, நம் அருட்பெருஞ்ஜோதி பதியை இவ்வுடம்பில் வைத்துக் கண்டு கொள்ளுவதே மெய்ப்பயனாக தெளிந்து கொள்ளப்படுகின்றதாம்.
அந்த மெய்ப்பயனின் அடைவே, அல்லது அனுபவமே கைப்பொருளளைக ஈண்டு உரைக்கப்பட்டுள்ளதாம். கை வரப்பெறுதல், சொந்தமாக அடைதல், உரிமை ஆக்கிக் கொள்ளுதல், உடைமையாதல் எல்லாம் “கைப்பொருள்” என்பதில் அடங்கும். (உள்ளம்) கைக்கனி என்பதும் இந்த அனுபவ நிலையே சுட்டி நிற்பதாகும்.
பின்னர், “விலையறியா மணியே” என விளம்பப்படுகின்றது. அற்பப் பயன் தந்து ஒழியும் உலகம் கண்ட மணிக்குத்தான், இவ்வளவு விலைபெறும் என மதிப்பிட முடியும். ஒப்புயர்வற்ற நம் அருட்பெருஞ்ஜோதி மணிக்கு விலையேது மதிப்பேது! ஆனால் இவ்விலை அறியா மணியோ காசு (குற்றம்) இல்லார்க்கே உரிமையாய் உள்ளதாம்.
“இந்த உலகில் காசில்லாரே அருட்செல்வர்களளைவர்” அவர்கட்கே இம் மணி, வலிய வழங்கப்படும். நாமும் இந்த காசில்லார்க்குரிய மாசில்லா மணியைப் பெறுதற்கு, பக்தியோடு பணிந்து, “தகுந்த தனிப் பெரும் பதியே, தயாநிதியே, கதியே சத்தியமே”, என்றெல்லாம் போற்றித் துதித்திடுவோமாக.
தகுந்த தனிப்பெரும் பதியாவது, தனிப்பெரும் பதி ஆவதற்கு தகுதி வாய்ந்தவர் என்பர் கருத்து. அதாவது எல்லோருக்கும் மேலாய், தனக்கு ஒப்பில்லாராய், எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்வுயிரின் மீதும், எப்பொருளின் மீதும் தன் ஆணையைச் செலுத்துகின்றவராய் ஏக நாயகனாய் உள்ளவர் நம் பதியே. ஆதலின், அவரே தகுந்த தனிப்பெரும் பதியாகச் சாற்றப்படுகின்றார்.
“தயாநிதி” என்று குறிக்கப்படுவதால், கடவுளரின் மெய்ப்பொருளின் தனிப்பெருந் தயவுத் தன்மை சுட்டப்படுவதாகும். யாவராலும் விரும்பப்படும் திருவொடு விளங்குகின்றது இந்தத் தயாநிதியாகும். மற்ற உலக நிதியைத் துறவோர் விரும்புகின்றதில்லை. ஆதலின், அவர்கள், அந்த அழிபடு பொருளை, வெறுக்கை என்றும் ஆட்கொல்லி என்றும் சொல்லுகின்றார்கள்.
ஆனால், இன்றைய உலகம், அந்த மாயா நிதியைத் தானே மிக முக்கியாக மதித்துக் கொண்டாடுகின்றது. நம் தயா நிதியை யார் அறிய முயலுகின்றார்கள்! உலகியலுக்குப் பொருúள அல்லவா பரம்பொருளளையிருக்கின்றது. சன்மார்க்க ஞானியர்க்கே, அருúள பொருளளைக, சுத்த தயவே பெருநிதியாகவுள்ளதாம்.
‘கதி’யே என வழுத்தப்படுகின்றதும், நம் அருட் பெருஞ்ஜோதிக்கே பொருந்துவதாம். கதியாவது, செல்லும் மார்க்கம், அடைவிடம், புகல் எனவெல்லாம் உள்ளதாம். அப்படியுள்ளது நம்முடைய அருட்பெருஞ் ஜோதியே எனக் கண்டு கொண்டுள்úளளைம். மற்ற உலகியற் கதிகள் எல்லாம் பெருமையுடையன அல்லவாம். போற்றிக் கொள்ளத்தக்கனவும் அல்லவாம்.
முடிவாக ‘சத்தியமே’ என்று கூறித் துதிக்கப்படுகின்றது. சத்தியமாவது உண்மை என்ப. சத்தாம், நித்தியமாய் அழியாது இலங்கும் தன்மையே சத்தியம் என்றதன் மெய்ப்பொருள். அப்படி உள்ளது நமது அருட் பெருஞ் ஜோதிபதி ஒன்றே ஆதலின், அதுவே சத்தியம்.
“அந்த சத்திய வஸ்துவை, சத்தியமாக அறிந்து சார்ந்து கொள்ளுகின்றவர்கள், அந்தச் சததிய ஜோதியாகவே நித்திய மங்களத்தோடு நிலவுவது சத்தியமேயாம்.
இங்கு மேற்கொண்டுள்ள ஞான சரியா மார்க்கத்தில், உள்ளத்திலங்கும் அருட்பெரும் பொருளைக் கண்டு கொண்டு, பரோபகாரச் செயல் வெளிப்பட அனக வாழ்வு வாழ்தல் வேண்டியுள்ளது. அதனால் தனிமையில் இருந்து, அருட் ஜோதியின் புகழ் பாடிக் கூடி நிற்கப் பழகுதற் பொருட்டு இப்பாக்கள் இசைக்கப்படுவதாகக் கண்டு கொள்வோமாக. அப்படி அகநிலை பெற்றுக் கொண்டால் தான், மேல் அனக வாழ்வு வாழ முடியும். இனி, மூன்றாம் பாடலைத் தொடருவோம்.
3. பாடல்
பணிந்துபணிந் தணிந்து
பாடுமினோ புலகீர்
பரம்பரமே சிதம்பரமே
பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த
சுத்தவனு பவமே
துரியமுடி யனுபவமே
சுத்தசித்தாந் தமதாய்த்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே
சமரசசன் மார்க்க
சத்தியமே இயற்கையுண்மைத்
தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்துநினைந்
துரைத்திடிலப் பொழுதே
காணாத காட்சியெலாம்
கண்டுகொள லாமே.
இதில், துதிக்க வேண்டிய முறையைப் பலவாக விரித்துரைக்கின்றார். அத்துதிக்கப்படு பொருளளைகிய கடவுள் ஒளியைக் காணும் போது, இதுவரை காணாத காட்சியெல்லாம் கண்டு கொள்ளலாமே என சுயானுபவம் கூறுகின்றார்.
அதற்கு, “அவ்வனுபவம் பெறுவதற்குப் பணிந்து, பணிந்து, அணிந்து, அணிந்து பாடுதல் வேண்டும். அக நோக்கிய பணிவு, லலாட பீடத்தில் இருந்து, சத்விசாரத்தால் ஏற்பட வேண்டும்”.
மனம், அதிகம் உலக விஷயங்களிலே ஓடிக் கொண்டிருக்கும் இயல்புடையது. எனவே, முதலில் அவ்விடத்து ஒருமையுற்றிருப்பது கடினமாகும். தயவோடு கூடிய நிராசை உண்டாகி இருந்தால் மனம் எளிதில் ஒருமையுறும். அப்படி ஒருமையுறவே மேலும் மேலும் பணிதல் செய்ய வேண்டி உள்ளதாம்.
“தெய்வத் திருவடியில், ஆறங்கமும் நிலம் தோயப் பணிவதால், தேகப் பற்றும் தற்போதமும் அழிகின்றன”
அப்போதுதான், மாசற்ற மனத்தின் கண் ஈசன் ஒளி வீசும். ஆதலின் அங்ஙனம் தொழுதெழுந்து நின்று, அவ்வீசனது அருட் பெருமையை, உன்னியுன்னி அணியுறப் பாடிப்பாடிக் கொண்டிருத்தல் முறையாகும். அவ்வருள் ஒளியில் தான்.
“பரம்பரமே, சிதம்பரமே, பராபரமே, வரமே, துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே, துரியமுடி அனுபவமே; சுத்த சித்தாந்த மதாய்த் தணிந்த நிலை பெருஞ்சுகமே, சமரச சன்மார்க்க சத்தியமே, இயற்கை உண்மைத் தனிப்பதியே.
என்றெல்லாம் அழகுறப் புனைந்து புனைந்து பாடலாகின்றது. இந்தப் புனைபெயர்கள் எல்லாம் பொருள் தெரிந்தே ஆக்கப்பட வேண்டும். முன்னோர் கற்பித்தனவாகக் கொண்டு ஓதல் சிறப்பன்றாம். அச் சொற்பொருளை ஈண்டு சற்றே விளக்குவாம்:
பரம்பரம் என்றது. நம் பதியின், எல்லாவற்றிற்கும் மேலான நிலையை உணர்த்த வந்த சொல்லாம். ‘பரம்’, என்றாலே உயர்ந்தது என்று பொருள்படும். இந்தப் பிரபஞ்சத்தில் எது ஒன்று உயர்ந்ததாகக் காணப்படுகின்றதோ அந்த உயர்ந்ததற்கும் மேலானது தான் பரம்பரம் ஆகிய நம் பதியாம்.
அன்றியும், ஆதியும் அந்தமும் இல்லாமல், தொடர்ந்து வந்து விளங்கிக் கொண்டிருப்பது பரம்பரையான பொருளளைகப் பகரப்படும். அது நம் அருட்பெருஞ்ஜோதியாம் பரம்பொருள்தான். இதுவே ‘பரம்பரமே’ எனப் பரவப்பட்டது.
சிதம்பரமே-சிதம்பரம் என்றால் சித்+அம்பரம்-ஞான ஆகாசம் நம் பதியின், அருள் ஞானம் விளங்கும் அக ஆகாசமே சுட்டப்படுவதாம்.
இனி பராபரம்-என்றால், பரம் அபரம் என விளங்குவது. எது உயர்ந்தது அல்லது சிறந்ததுவோ அதுவே, பரம் எனப்படும் போது, அதுவல்லாத பிற எல்லாம் அபரம் மாகவே கொள்ளப்படும்.
உள்ளது ஒன்றே. அதில் ஒரு கூறு பரம் என்றால் எஞ்சியது அபரம் ஆம். இதுபோல், கண்டம் ஒரு பகுதி, அகண்டம் முழுமையாம். பரமும், அபரமும் சேர்ந்தே முழுப்பரம் பொருளளைகும். ஆகையால்தான், நமது ஆண்டவர் பராபரமாகப் போற்றப்படுகின்றார்.
வரமே-என்று குறிக்கப்படும் போது, உயர்ந்த தெய்வநிலைப் பேற்றைச் சுட்டும். நம் பதியே அப்பேறாகவும், அப்பேற்றை வழங்கும் ஒன்றாகவும் அறிந்து கொள்ளப்படுவதால், இங்ஙனம் ‘வரமே’ எனப் போற்றிக் கொள்ளப்படுவதாம்.
மேலே கூறப்படுவது சுத்த அனுபவ நிலைகளளைம். அதில் துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவம் நம் பதியாகும். அதாவது வேதாந்தத் துணிவுப் பொருள் “நான் கடவுள்” என்பதுவே. இது வேதாந்தத்தில் பாவனையாகத் தோற்றி ஒழிவதே அன்றி நிலைத்து விளங்குவதில்லை.
அருள்மய சுத்த சன்மார்க்கத்தில்தான், ‘அது நான்’ என்ற அனுபவமும் வாழ்வும் உண்டாகின்றதாம்.
“இந்த பதியுணர்வு விழிப்பு நிலையில்
விளங்குவதே போல், கனவு நிலையிலும்,
உறக்க நிலையிலும், கழன்று (மறைந்து)
போய் விடாது, மேலும் நிலைத்திலங்குவதே
துரியானுபவ நிலை எனப்படும்”
துரியம் என்ற சொல், தன்மயமாய் நிற்பது என்றே பொருள்படும்.
சித்தாந்தம் - சிவனருளளைல், பசுத்துவம் நீங்கி, இரண்டற்றுப் போதல். இதில் காணும் சிவானுபவம் தேகம் உள்ள பரியந்தமே நிலைக்கின்றதாம்.
ஆதலின், அதனை மறுக்கவே சுத்த சித்தாந்தம் வந்தது. இதில், சிவானுபவம் ஒழியாது விளங்குவதாம். சிவமாயிருந்த பதியே, “தணிந்த நிலைப் பெருஞ்சுகமாக சுத்த சன்மார்க்க அனுபவத்தில் இறங்கி விளங்குகின்றதாம். ஆகையால், நம் சுத்த நெறியின் வந்திலங்கும் சத்திய வஸ்துவை, “இயற்கை உண்மையாம் சத்துப் பொருளளைக, தன்னிகரில்லா ஒன்றாக” போற்றப்படுகின்றதாம்.”
இவ்வளவுமாக விளங்கும் பதியை முதலில் நம் உள்ளத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். அதுதான் கணிந்திடல் வேண்டுமெனப்பட்டது. கணித்தலே இங்ஙனம் மெல்லினத்து ஓதப்பட்டதாம். கணக்கிட்டுப் பதிவு செய்தலே கணித்தல் என்ப. அப்படிக் கடவுள் தத்துவத்தை உள்ளத்தில் இருத்திக் கொண்டபின், உள்ள நெகிழ்வால், கனிவால் துதி செய்யச் செய்ய உண்மைகள் யாவும் தெரியத் தொடங்கும்.
அப்பொழுது, காணாத காட்சியெல்லாம் கண்டு கொள்ளலாம். “இந்தக் காணாத காட்சி, புலக்காட்சி மட்டுமல்ல கரணக்காட்சி, ஜீவக்காட்சி, ஆன்மக்காட்சியும் அவற்றிற்கு மேலாம் அருளனுபவமுமாம். இக்காட்சிகளின் முடிவில் பெறுவது சுத்த சுக ஞான பேரின்பமேயாம்”.
இனி, அவ்வுண்மைக் காட்சி விசேடத்தை உணர்த்தி மேனிலைக் கண் அடைவிக்கும் உபாயமாக அடுத்த பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகும். அதனை இங்கு எடுத்துக் கொண்டு ஆய்வோம்.
4. பாடல்
கண்டதெலா மநித்தியமே
கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே நீர்
களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட்
கொண்டதெலாம் குறையே
உலகியலீ ரிதுவரையும்
உண்மையறிந் திலிரே
விண்டதனா லென்னினிநீர்
சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைபிடித்து
மெய்ப்பொருணன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே
எந்தையரு ளடைமின்
இறவாத வரம்பெறலாம்
இன்பமுற லாமே.
நாம் இந்த உலகில் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்úளர்? நமது இலட்சியம் என்ன? அந்த இலட்சியத்தை எப்படி அடைவது? என்பதெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
அருளளைளர் உள்ளத்தில் இதற்கான விடைகள் நன்கு விளஙகுகின்றன. அவற்றை நாமும் தெரிந்து கொண்டால்தான், அருள் நன்முயற்சி செய்ய முடியும். நம் பதியும் அவற்றை நன்கருளி இனிது முடித்து வைப்பார்.
ஆண்டவர் தமது பூரண அருளை வழங்கவே நம்மை ஈண்டு வரவழைத்துள்ளளைர். ஆதலின், அருளைப் பெறுவú நமது இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அருளைப் பெறுவது எப்படி என்பதுதான் இந்த ஞான சரியை சத்விசாரத் துதிப்பாடலில் காட்டப்படுகின்றது.
“இறவாத வரம் பெற்று, அழியாத இன்பமுற்று என்றென்றும் வாழலாம்” என இப்பாடலில், உறுதி கூறப்பட்டுள்ளது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்து கொண்டிருக்கின்றோம் (இந்த நொடி வரை) என்பதைப் பார்ப்போம்.
“நாம், கடவுள் உண்மையைச் சத்விசாரத்தால் அறிந்து, தெரிந்து, தெளிந்து பற்றிக் கொண்டு, அதனோடு கலந்து வாழ வேண்டும்.
அப்படியெல்லாம் செய்யாமல் மாறுபாடான காட்சியும் அனுபவமும் கொண்டு உழல்கின்றோம். இதனையே உணர்த்த வந்தன இச்செய்யுளின் முதல் இரண்டடிகள்.
“கண்டதெல்லாம் அநித்தியம்” என்பது உண்மை தானே. ஆனால், அநித்தியம் என்று உணர்ந்து கொண்டும், அதில் பற்று வைத்துக் கொண்டு எல்லாத் துன்பங்களையும் வரவழைத்துக் கொள்கிறோம். இந்த மூடச் செயல் ஒழிய வேண்டும்.
இதுபோல், கேட்டவை யாவும் பழுது பட்டொழிவனவே இன்சொல்லால் மகிழ்ந்திட்டோம். நல்லுரைகளளைலும், உபதேசங்களளைலும் எவ்வளவோ தெரிந்து கொண்டோம்” எனினும் அவையொன்றும் நிலையான இன்ப வாழ்வில் கூட்டி வைக்கவில்லை - நம்மை. அவை யாவும் பழுதுபட்டு ஒழிவனவெயாம்.
அடுத்து, ‘கற்றதெல்லாம் பொய்யே’ எனப்படுகின்றது. ஆம், மனிதன், உலகியலில் எத்தனை கலைகளை, மொழிகளை, செயல்களைப் பழக்க வழக்கங்களை, எல்லாம் கற்றுக் கொள்கின்றான். அங்ஙனம் கற்றுத் துறை போகி சிறந்திலங்கிய மனிதன், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அகன்று விடுகின்றான்.
“அவனே போய் விட்டபின், அவனது புகழ் மட்டும் நின்று என்ன பயனோ? அவனுக்கு!” ஆதலின் இது வரை கற்றதெல்லாம் பொய்த்துப் போவனவேயாம்.
களித்த தெல்லாம் வீணே, எனப்படுகின்றது. ஐம்புலன் இன்பத்திலும், நால்வகைக் கரணங்களளைலும் துய்த்தவை எல்லாம் வீண் எனக் காண்கின்றோம் முடிவில்!
‘உண்டதெல்லாம் மலமே’ - அறிவு வந்த நாள் முதல் உண்டவையல்லாம் கணக்குப் பார்த்தால், அந்த அளவைக் காணும் போது வியக்க நேரிடும். இவ்வளவா உண்டாம் என்று வியக்க நேரிடும். “இவ்வளவா உண்டோம்” என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்! அவ்வளவும் என்னவாச்சி? அநேகமாக எல்லாம் மலமாகப் போனது போக, மல உடம்பு தான் மிஞ்சியுள்ளதாம்.
இந்த மல உடம்பை சுமக்கத்தானா உண்டு வளர்ந்தோம்?
அருளளைலே அருளை அடைந்து, சூழுற்ற சுமை உடம்பை, சொல்லரிய “தயா ஜோதி உடம்பாக மாற்றிக் கொள்ளவன்றோ வந்துள்úளளைம்”. ஆதலின், உணவில் விருப்பு, வெறுப்பின்றி, சுத்த சத்துவ ஆகாரத்தை அளவாக ஏற்று, உயிர் விளக்கமும், அருள் அறிவு விளக்கமும் கொண்டு உய்வோமாக.
‘உட்கொண்டதெல்லாம் குறையே’ ஆம், உட்கொண்ட உண்டியும் எண்ணங்களும், லட்சியங்களும், வாழ்க்கை அனுபவங்களும் குறைவுடையனவே.
இதுவரையில், உலகியலில் உண்மை அறியாமல் வீண் போகிறார்கள் மக்கள். ஏதோ பக்குவ வசத்தால் சிறிது உண்மை அறிந்தும் கூட, பழக்க வசத்தால் பழைய வழிகளிலேய (நழுவிச்) சென்று பாழ்படுகின்றார்கள்.
இவ்வளவையும் விண்டு-வெளிப்படையாக எடுத்துச் சொல்லிவிடுகின்றார், நம் வள்ளல் பெருமான். சொல்லி விட்டு, உண்மை நெறியாகிக சுத்த சன்மார்க்கத்தை வழங்குகின்றார். இதனைக் கைக்கொண்டு ஒழுகி, மெய்ப்பொருளை அகத்திலே நன்கு உணர்ந்து பதிவு செய்து கொள்ளல் வேண்டும். அப்படி அகப்பதியிலே பதிவுற்று நிற்றல் சத்விசார இயல்பாகும்.
ஆனால், இந்த விசாரத்திலேயே அழுந்திப் போய் விடக்கூடாது. அப்படி அழுந்திப் போனால் உலக வாழ்வு தடைபட்டுப் போகும். அருளளைளன் திருவுள்ளம் அதுவன்று. அங்ஙனம் இருந்து கொண்டுதான் (அகம்) நம் அருட்ஜோதிபதி சூழுலகத்தை எல்லாம் ஆள்கின்றார்.
அவரைப்போற்றிக் கொண்டு வாழ்கின்ற நாமும் அவர் மயமாகி அருúள உணர்விலும், உயிருடம்பிலும், குணச் செயல்களிலும் வெளிப்பட வாழ வேண்டும். அந்த வாழ்வு தான் சிற்றம்பல வாழ்வாகச் சிறப்பித்துக் கூறப்படும்.
அந்த சிற்றம்பலம், எண்தகு சிற்றம்பலமாக இயம்பப் படுகின்றது. எண்ணுதற்கு, சிந்தித்து தெளிவுற்றுக் கருத்தில் கொள்ளுவதற்குத் தகுந்தது, இந்தச் சிற்றம்பலம் என்பது குறிப்பு. இதிலிருந்து கொண்டு “தயவு மய வாழ்வு நடத்துவதே, எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைதலாகக்” குறிக்கப்பட்டுள்ளதாகும்.
மற்றபடி, எல்லோருக்கும்தான் பதித் திருவருள் பொதுவாக ஏகதேசமாக இயற்கையிலேயே அமைந்துள்ளது. தான தர்ம நற்செயல்களளைல் ஓரளவு விசேட அருளைப் பெற்று ஓரளவு இன்புற்றும் இருக்கலாம். ஆனால் அவ்வருளின்ப வாழ்வு நிறைவு பெற்றதாய் விளங்க வேண்டுமாயின், சிற்றம்பலத்திலே பொருந்தி இருந்த கொண்டு, அருúள பெருகப் பெருக வாழவேண்டும் என்பது தெளிவாம்.
இப்படி, அம்பல இன்ப வாழ்வு வாழும் போது, அநித்தியமாகக் காண்பவற்றிலும், கேள்விப்படும் பழுதான விஷயங்களிலும், கற்கின்ற பொய் நூல்களிலும் கூட மறைந்து கிடக்கும் சிறிதளவு உண்மையைக் கண்டு மற்றவைகளû விலக்கி விடவும் கூடும்.
ஏதேதோ உண்டு களித்தும், கதைபேசியும், உறங்கி விழித்து கழித்ததெல்லாம் கூட திருவருளின் திருவுளப்படியே நடந்துள்ளதாகவும், அவற்றிலிருந்து நிகர இலாபமாக ஓரளவு உண்மை ஞானமும், சுத்த தயவில் பற்றுதலும் உண்டாகி இருப்பதாகவும் உணர்ந்து கொள்கின்றோம்.
அதனால், இப்பொழுது முதல், அருள் அம்பலத்தில் பொருந்தி, அருள் வாழ்வு நடத்துவோம். நடத்தி ஆனந்தத்தில் விளங்குவோமாக.
5. பாடல்
இன்புறலாம் எவ்வுலகும்
ஏத்திடவாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி
இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மினிங்கே
சமரசசன் மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங்
கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிரொளியே
புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின்
பொருள்முடிமேற் பொருúள
வன்புடையார் பெறற்கரிதாம்
மணியேசிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின்
தீமையெலாம் தவிர்ந்தே
மனிதனாகப் பிறந்துள்ளவன், “மண் - நித்திய, நிலையான இதன் - இன்பமுடையவன்” ஆக வாழ வேண்டும் என்பதே ஆண்டவர் திருவுள்ளம். அப்படி இன்ப நிலையுறுவதால், எவ்வுலகும் புகழ்ந்து கொண்டாடும்படி வாழ்ந்திடலாம் என்கின்றார். அத்தோடு எல்லாஞ் செய்யவல்ல கடவுட் சித்தியும் கைவரப் பெற்றிடலாம் என்கின்றார்.
அதற்கு, அவ்வாழ்வு பெறுவதற்கு, ‘அன்பர்கúள, இவண் வாருங்கள்’ என்கின்றர். எங்கு வரச் சொல்லி அழைக்கின்றார்? என்றால், “நமது அருட்பெருஞ்ஜோதி வளர் சத்திய ஞான சபையாகிய உள்ளக் கோயிலுக்கே” அழைக்கின்றார். இங்கு தான் நித்தியமாக இருந்து கொண்டு, வம்மின், வம்மின் என்று அன்போடு அழைத்துக் கொண்டேயிருக்கின்றார்.
“நாமும் அன்பொழுக்கத்தோடு சத்விசாரம் செய்து தான் அவரையும், அவர் விளங்கும், அருளம்பலத்தையும் கண்டு அடையலாம்”.
எப்படியோ விசாரவசத்தால், அகப் பெரும்பதியைக் கண்டு கொண்டுவிட்டாலும் போதாது. கண்ட அப்பதியோடு ஒன்றி நின்று கொண்டு, அந்த அக வடிவமே, அனக வடிவாக நிறைந்து பெருகிக் கொண்டேயிருத்தல் வேண்டும்.
அதாவது “அகத்திலிருந்து தயா உணர்வையும், தயா ஆர்வத்தோடு கூடிய சிந்தனையையும், சொற்களையும், செய்கைகளையும், உள்ளிருந்தே (அத் தயா ஜோதிபதியிடத்திருந்தே) வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்” என்பதாம்.
அப்படிச் செய்து கொண்டிருக்கும் போது, விசார ஞானத்தில் அறியப்படுகின்ற கடவுள் விளக்கத்தைத் துதித்தல் முறையாகும். அத்துதிதான், பின் அரைப்பாவில் காண்கின்றோம்.
“பொன்புநடை நன்கு ஒளிர் ஒளியே,” எனப்படுகின்றது. கற்பூர ஜோதியில், பொன்னொளி சூழப்பெற்றிருக்கக் காண்கின்றோம். நமது தயா ஜோதிப் பதியும், சுத்த தயவு என்னும் பொன்னால் சூழ்ந்திலங்குவதாம். முதலில் இக்காட்சியே ஏற்படுவதாம்.
இனி, அத்தயா ஜோதியே, ‘புத்தமுதாகவும்’ உணரப்படுகின்றது. இந்த அமுதம், கண்டபோதே பசி தீர்க்க வல்லதாய் இருக்கின்றதாம். ஆதலின், இதுவும் காட்சி மாத்திரத்தால் உண்டான அனுபவமாகக் கொள்ளலாம். ஏனெனில், “பூரண அனுபவத்தில், அதுவாய் இரண்டற்றிருக்க நேருங்கால், மெளனாந்தமே அமையும்” அப்போது துதித்திடவும், வெளியிடவும் இடமில்லை.
ஆனால், இங்கு மேலும் மேலும் துதித்துக் கொண்டே இருக்கின்றோம். ஆதலின், இது துவைதமாகிய சத்விசார நிலையனுபவமே ஆகத் தெளிந்து கொள்ளல் வேண்டும்.
அடுத்து “ஞான பூரணமே”, எனப்படுகின்றது. ‘சர்வஞ்ஞன்’ என்பது மறைமொழி. எல்லாம் அறிகின்ற அறிவு மயமான பொருள், நிறையறிவுப் பரம்பொருள் நம் பதி என்பது உணர்த்தப்படுவது.
மேல், “ஆரணத்தின் பொருள் முடி மேற்பொருúள” என ஓதியுள்ளளைர். ஆரணமாவது வேதம். அதன் பொருள் என்பது ஆகமம். அவ் ஆகமத்திற்கம் மூல காரணமானதுவே, ஆகமத்தின் மேற்பொருள் ஆகும்.
“வேதம் - உபாய ஞானம்
ஆகமம் - உண்மை ஞானம்
தயாஜோதி அனகவாழ்வே - அனுபவ ஞானமாம்”
இனி, “வன்புடையார் பெறற்கரிதாம் மணியே” என்றது, அன்புக்கு எதிர்ப்பதமே வன்பு என்னும் கடின சித்த நிலையாகும். அவர்கள் நமது தயா மயமான அன்பொளிக் கடவுளை எங்ஙனம் காண முடியும்? ஆகவே, அவர்களளைல் இதனை அறியவும், காணவும், அடையவும் முடியாதென்பது தெளிவாம்.
ஆகையால், இந்த வன்பு நிறை கல் நெஞ்சம் அன்பினால் கசிந்து உருக வேண்டும். அப்போது தீமையெல்லாம் தவிர்ந்துபோம். அந்த அன்பு நெஞ்சிலே குடிகொண்டு விளங்குவார் நம் தயா நேயர்.
“அன்பு முந்து சிந்தையே
ஆலயங் கொள் தந்தையே”
என பிறிதோர் இடத்தில் வாழ்த்துகின்றார் வள்ளல் பெருமான்.
“சிற்சபையின் மாமருந்தே” என்றுரைமின் எனக் குறிக்கின்றார். இந்தச் சிற்சபா மருந்து எல்லாப்பிணிகளையும் வேரறக் களைந்து என்றென்றும் நோயற்ற வாழ்வில் விளங்கச் செய்வதாம்.
6. பாடல்
தீமையெல்லாம் நன்மையென்றே
திருவுளங்கொண் டருளிச்
சிறியேனுக் கருளமுதத்
தெளிவளித்த திறத்தை
ஆமயந்தீர்த் தியற்கையின்ப
அனுபவமே மயமாய்
அம்பலத்தே விளங்குகின்ற
அருட்பெருஞ் ஜோதியை ஓர்
ஓமயவான் வடிவுடையோர்
உள்ளகத்தே நிறைந்த
ஒருபொருளைப் பெருங்கருணை
உடையபெரும் பதியை
நாமருவி இறவாத
நலம்பெறலா முலகீர்
நல்லவொரு தருணமிது
வல்லைவம்மின் நீரே.
ஆமயம் - என்றால், ஆன்மாவின் இயற்கைத் தன்மையாம். ஆன்மா நித்தியமானது என்றாலும், ஆணவ மல சகிதமாய் இருத்தலின், மேல் மாயா கன்ம மலங்கள் சார்ந்து சார்ந்து, புறத்தே பிறப்பிறப்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து கொண்டே இருப்பனவாம்.
ஆதலின், ஆன்ம சுபாவத்தை முடிந்த நிலையாகக் கொள்ளற்கில்லையாம். இவ்வியற்கை நிலையைத் தீர்த்து இயற்கை இன்பானுபவமே, அதற்கு உரிய கடவுட் சுபாவமாய்ப் பெற்று நிலவ வேண்டி உள்ளதாம். இச் சுத்த நிலை வழங்கி, ஆன்மாவைத் தன்னுடன் கொண்டு, அம்பலத்தே ஆடுகின்றார் நம் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இந்த உண்மை ஆண்டவரை, ஓமயவான் வடிவுடையார், உள் அகத்தே நிறைந்திலங்கக் காண்கின்றார்கள். அம் மாகருணை வள்ளற் ஜோதியை, நாமும் கலந்து கொண்டு நலம் எல்லாம் பெறலாம். “இச்சமயம் மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஆதலின், வாருங்கள் நீவிரெல்லாம்” என அழைப்புவிடுக்கின்றார் நம் திருவருட்பிரகாசர்.
அவர் எவ்வளவு பெரிய அனுபவ நிலையைப் பெற்று விளங்குகின்றார். இருந்தும், தன் தற்போதத்தைச் சிறிதும் காட்டிக் கொள்ளளைது, தனக்கு, அவ்வருட்பெரும் பதி, தீமையெல்லாம் நன்மை என்றே திருவுளங் கொண்டருளி அருள் அமுதத் தெளிவளித்தார் என்று தெரிவிக்கின்றார்.
ஆகையால், எவ்வளவோ கீழ்க்கடையான நிலையில் உழன்று கொண்டிருக்கின்ற நாம், எப்படியெல்லாம் வருந்தி, உளமுருகி, அப்பதியை வேண்டிக் கொள்ள வேண்டும். அப்படி வேண்டிக் கொண்டால், அவசியம் கருணை பாலிப்பார். அவர் தனிப்பெரும் கருணை வள்ளலன்றோ!
ஓமயவான் வடிவு என்றது. “அருள் ஆகாச வண்ணமாகிய பிரணவ உண்மை ஒளி வடிவமாம்”. “அருட்பக்குவிகளின் உள்ளம், இவ்வொளி வண்ணமாய்த் திகழ்வதாம். உள்ளத்தில் இது இருக்கின்றதா அல்லது உள்ளமே அதுவாகி விட்டதா எனப் பிரித்தறியக் கூடாவண்ணம் விளங்குவதாம்”
“உள்ளத்துள் ஓங்காரமாய்
நின்ற விமல”
என ஓதுகின்றார்கள் ஆன்றோர்கள். சமய சன்மார்க்கியின் உள்ளத்தில் அவ் ஓம், ஒளியாயிருந்தது, தேகம் இருக்கும் வரை விளங்கிக் கொண்டிருந்தது. அவனையே தன்னில் கிரகித்துக் கொண்டு மறைந்ததாம்.
ஆனால், இப்பொழுது, அது ஓங்காரத்து உட்பொருளளைகிய பேரருள் வண்ணமாய் விளங்கி நின்று, அனக நிறைவால், அவனது உடலைச் சுத்த சன்மார்க்கச் சுக உருவாய் ஆக்கி, நிலை பெறச் செய்து விடுகின்றதாம். இதில் அவன், பதியோடு இருந்து கொண்டு, அனக வாழ்வே நடத்துகின்றான்.
உண்மையில் இருக்கின்றது, அந்த அருட் பெருஞ் ஜோதிபதி ஒருவரே. அவரே நமது சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளி இருக்கின்றார். இருந்து ஐந்தொழில் ஆட்டம் ஆடுகின்றார். அந்த ஆட்டத்தின் விளைவே, அவரைச் சுற்றி உயிருடம்புகள் தோற்றி மறையும் செயலாகும். இதில், அவரும் அவரது அருள் நடனமுமே அல்லாது பிறிதொன்றில்லையாம்.
அப்படியாயின் “நாம்”, “நாம்” என்று
சொல்லிக் கொள்ளுகின்றோமே, இது என்ன?
அல்லது யார்? எங்கே உள்ளது?
“அது தேகப்பற்று காரணமாக எழுந்த உணர்வின் ரூபமே - நாமாகவுள்ளதாம்”. உண்மையில் அத்தேகமும், உணர்வும் ஆண்டவர் அருளின் கூறேயாம். இது, இவ்வுடற் பற்று நீங்கிய விடத்து உள்ளிருந்து விளங்குவதாகும். அங்கு, அருட் ஜோதி பதியே நமது உள்ளமாய், நாமாய் இருக்கக் காண்கின்றோம்.
“தேகப் பற்றற்ற விடத்து, அவ்வொளியுருவை மருவி அதுவாகி விளங்க உள்ளதாம்”.
இங்ஙனம், அருள் மயமாகி வாழவே நம் அருட் ஜோதியார் அழைத்துக் கொண்டுள்ளளைர். அருட் பெருஞ்ஜோதிபதியே, அருட் பிரகாச வள்ளல் உருவாயது. அதுவும், அவரும் ஒன்றாகி, இப்பொழுது நாமாகவும் ஒன்றியுள்ளளைர் என்பது உண்மை.
சுத்த சன்மார்க்கத்தினால் யாவரும் பெற்றுக்கொள்ள உள்ளது இந்த அருட்ஜோதி இன்ப வடிவமேயாம்.
7. பாடல்
நீர்பிறரோ யானுமக்கு
நேயவுற வலனோ
நெடுமொழியே யுரைப்பனன்றிக்
கொடுமொழிசொல் வேனோ
சார்புறவே அருளமுதம்
தந்தெனைமே லேற்றித்
தனித்தபெருஞ் சுகமளித்த
தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப்பொதுவில்
திருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற
திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே இதுவல்ல
தருணமிங்கே வம்மின்
உலகியலீர் உன்னியவா
றற்றிடுவீர் விரைந்தே.
நான் என்றும், நீர் என்றும், பிறர் என்றும் தோற்றுகின்றன வெல்லாம் என்ன என ஆராய்ந்து நோக்கும் போது, “ஒன்றான, அந்த அருட் பெருஞ் ஜோதிக் கடவுúள, ஒவ்வொருவருடைய ஆன்ம அணுவாய் இருந்து கொண்டு, ஒவ்வொரு சூழுருவம் ஏற்று விளங்குவதாக அறிகின்றோம்.”
ஆதலின், “யாவரும் ஒரு தன்மையான ஆன்மாக்கúள” யாவோம். அந்த ஒரு தன்மை என்பதுதான் அருட்பெருஞ்ஜோதி மயமாம். “இந்த அருள் ஞானத்தால் தான், நாம் யாவரும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமைச் சகோதரர்கள் எனத் தெளிந்து கொள்ளுகின்றோம்”.
இந்த ஆன்ம நேய உறவு முறையைத்தான் இப்பாவின் முதலடியில் குறிப்பிடுகின்றார். இவ்வுறவுக் காரணமாகவே, பலப்பலவாக எடுத்துக்கூறி அழைத்துக் கொண்டிருக்கின்றார். ஆகையால், அம்மொழிகள், கொடுமொழியும் அன்று, கெடுமொழியும் அன்று எல்லோருக்கும் நலஞ் செய்யும் நடுமொழியேயாகும்.
“சார்புறவே” நீவிரெல்லாம், என்னைச் சார்ந்து கொண்டு, மேனிலை பெறவே, என் பதி எனக்கு அருள் அமுதம் தந்துள்ளளைன். ஏறாத நிலைமேலேற்றி பெருஞ்சுகப் பேற்றை அருளியுள்ளளைன். அவன், எனது சத்திய ஞானப் பொதுவின் கண்ணே, அருட்ஜோதி உருக்கொண்டு எழுந்தருளி, அருள் அற்புதச் சித்திகள் பல புரியப் போகின்றான்.
அது எப்பொழுதோ எனத் தாமதித்திருத்தல் வேண்டாம். அது மிக அடுத்த சந்தர்ப்பமாக இருக்கின்றதால், நீங்கள், இவண் வந்து பாருங்கள், வந்து சாருங்கள் உலகீரே நீங்கள் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்வீர்கள். விரைந்து வந்து சேருங்கள்.
“திருப்பொது” - என்பது யாதெனில், நம் ஆன்மாலயமே. இது கடவுளுக்கு உண்மைக் கோயிலாம். ஆன்மாக்கள் எல்லாம் ஒரு தன்மையானவைகúள என மேலே கூறப்பட்டது. அவற்றிலெல்லாம் உறைகின்ற பதி ஒருவரே என்பதும் அறிவோம்.
ஆகையால், கடவுúள எல்லோருக்கும் பொதுவானவர் அந்தப் பொதுவில் வளர் ஆன்மாலயமும் பொதுவாகவே விளம்புதல் பொருந்தும்.
“எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே”.
என ஓதப்படுகின்றதும் காண்க கடவுளுக்கும் நமக்கும் பொது உறையுளளையிருக்கின்றது இந்த அருட்ஜோதி ஆன்மாலயமே.
“இதுவென்ற தெல்லாம்பொய் என்றான் எனக்கே
பொதுவின்றித் தங்குமிடம் போச்சு - அதுநான்காண்
என்றான் அதன்பேர் இரவைப் பகலாக்கும்
ஒன்றோ பரமசுக மோ”
(வள்ளலார் சாத்திரம்)
“உலகில் எந்த ஒரு இடமும், ஆன்மா தங்கி ஒளிர்வதற்கு இல்லையாம். அதற்குக் கடவுளளைகிய பொது ஒன்றே அமைந்துள்ளது.”
‘நான்’ என்றதற்குப் பொருளளையிருக்கும் அவ்வான்மாவே கடவுட் பொதுவாய் எனக்குள் உள்ளதாகும்.
ஆதலின், எனக்கு அப்பொதுவே, எக்காலத்தும் உறைவிடமாயிருக்கின்றது. இவ்வளவு காலம், இந்த உண்மையை அறியாதிருந்தேன். எனினும், அந்தப் பொதுவில் தான் இருந்தேன். இருக்கின்றேன், இனியும் இருப்பேன் என்பதைத் திருவருளளைல் கண்டு கொண்டுள்úளன், இச்சமயம்.
“இது முதலாக இங்கிருந்து நீங்காமல் இருந்து கொண்டு, சூழுடம்பையும் சுகமேனியாகக் கொண்டு சித்தாடல் புரிவேன். நீங்களும் வந்து கலந்து கொள்வீர்களளைனால் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் திகழலாம்” என்று இதில் குறிக்கப்படுகின்றதாம்.
“உன்னியவாறு உற்றிடுவீர்” - கருதிய வண்ணம் அடைந்திடுவீர்கள் என்கின்றார். ‘நாம்’ என்ற ஆன்ம போதம் போய்விடத்து, நாம் என்ன கருதவிருக்கின்றது. ஆண்டவர் கருத்து எதுவோ, அதுவே நம் கருத்துமாம். அதுதான், அருட்பெருஞ்ஜோதி யுருவொடு தனிப்பெருங் கருணை வாழ்வு வாழ வேண்டும் என்பதுவே, நம் பதி ஆணையாக உள்ளது.
சித்தாடல் புரிகின்ற தருணம் இது என ஓதப்படுகின்றது. யாதெனில் நமது எல்லாம் வல்ல பேரரூட் பெரும்பதி இந்த மகா பிரபஞ்சத்தை அனந்தங்கோடி காலமாக, அனந்த வண்ண பேதத்தோடு ஆக்கிக் காத்து மறைத்து வருகின்றார். ஈதெல்லாம் அவர் தம் அருட் பெரும் அற்புதச் சித்தேயாகும்.
அவர்தம் தொடர்பால், நம்மிடத்து ஒரு சில அற்புத சித்திகள் நிகழுதல் வியப்பன்றே! அது அவருடைய திருவுள்ளம்; வெளிப்படுத்திக் கொள்ளுவார். அவ்வற்புதச் செயல்கள், அவர்தம் அருட்செயலாகக் கொள்ள வேண்டுமேயன்றி, நம்மதென அகங்கரித்தல் கூடாது.
அப்படி அகங்கரித்திருந்தால், தீமையும் துன்பமுமே முடிவில் உண்டாகும். ஆகவே, ஆண்டவர் அருட்செயல் வெளிப்பட, நாம் அவருடன் கலந்திருந்து தயானந்தத்தோடு விளங்குவதற்கு இது நல்ல தருணமாம்.
8 பாடல்
விரைந்துவிரைந் தடைந்திடுமின்
மேதினியீர் இங்கே
மெய்மையுரைக் கின்றேன்நீர்
வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும்
இளமையடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும்
சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய்
வல்லசித்தன் தானே
வருகின்ற தருணமிது
வரம்பெறலாம் நீவிர்
கரைந்துகரைந் துளமுருகிக்
கண்களினீர் பெருகிக்
கருணைநடக் கடவுளைஉட்
கருதுமினோ களித்தே.
அக அம்பலத்தில் இருந்து கொண்டு இவ்வுலகிலுள்ள எல்லோரையும் அழைக்கின்றார், நம் அருட்பிரகாச வள்ளற் பெருமான். வீண் பொழுது போக்காமல், கால தாமதம் செய்யாமல், விரைவில் வந்து சேரும்படியாக, உள்ளம் நிறை அன்போடு வரவேற்கின்றார்.
மெய் என்பது சத்தாக உள்ளது. ஆதலின் மெய்மை என்னும் போது, அந்தச் சத்தாக உள்ளதின் தன்மையாகிய சத்தியத்தைக் குறிக்கின்றதாம்.
“சத்தான பரம் பொருளின் நித்தியத் தன்மையை சத்தியம் என்றும், அதுவே நமது உள்(ளத்தின்) தன்மையாக விளங்கும் போது, உண்மையென்றும், அதுவே சொல்லுருவாகி வெளிப்படுகின்ற போது வாய்மையென்றும் மொழியப்படுகின்றதாம்”.
இங்கு, நம் வள்ளலார், மெய்மையை, உண்மையிற் கண்டு, வாய்மையாய் விண்டுள்ளளைர். கடவுளைச் செய்யுள் வடிவில் செய்து காட்டுதல் போல, உரைத்தற்கரிய மெய்மையை இந்தப்பா வடிவில் உரைத்தருளியுள்ளளைர். இதனை அறிந்து கொள்ளளைமல் வேறு விதமாக நினைத்து விடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்ளுகின்றார்.
தயவாகிய நீர் பெருகிப் பொழிந்திட, கல் நெஞ்சமாகிய வன்மனம், நனைகின்றது, நெகிழ்கின்றது, கரைகின்றது. தயாவுணர்ச்சி மிகுதியால் கண்ணீர் பெருகுகின்றது. அப்பொழுது அந்த உணர்வோடு, திருக்கருணைப் பெருநடனம் புரிகின்ற கடவுளை நினைந்து நினைந்து, வியப்பரும் ஆனந்தத்தில் நிலவுவோம்.
அப்படி நிலவிடும் போது, நம் பதி அவ்வெல்லையில் தவறாது எழுந்தருளி, நித்திய தேக வாழ்வு பெற்று விளங்கும் வரம் தருகின்றார் என ஓதப்படுகின்றது. அவ்வரத்தால் பெறவுள்ளது. “சுத்த சுகானந்தப் பிறவா இறவாத் திருவடிவமாகும்”.
அதுதான், திரைந்து, திரைந்து உளுத்த வரும் இளமை அடைந்திட வரம் தருகின்றார். செத்தவர்கள் எழுந்திட, எழுந்து என்றென்றும் விளங்கிட வரம் தருகின்றார் என்று குறிக்கப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து, திருவருளின் பேராற்றல், என்னென்ன செய்ய வல்லது என்று தெரிந்து கொள்ளுகின்றோம். இதுவரை நாம், நமது உடம்பை அறியாமையாலும், அலட்சியத்தாலும், விதிமுறையாலும், அசுத்த நிலையில் பெருக்கிக் கொண்டு பிழைத்து வந்தோம்.
நரையும், திரையும், பிணியும், மூப்பும் வளரவிட்டு நலிந்து கொண்டுள்úளளைம். இப்படியெல்லாம், ஆகி விட்டதே இனி என்ன ஆகுமோ? என அச்சமும் ஐயமும் கொண்டு, கவலையில் ஆழ்ந்திட வேண்டியதில்லை, என்பதுவே இங்கு உணர்த்தப்படுகின்றதாம்.
உளமுருகி, கண்ணீர் கசிந்து மல்கி, கருணை வள்ளலை, அருள் அம்பலத்திலே கண்டு அடைந்து, வரம்பெற்று, வாழற்கான சந்தர்ப்பம் நமக்கு ஏற்பட்டுள்ளதாம். இத்தருணத்தில், அப்படி அம்பல வாழ்வு வரும் போது, திரைந்து சுருங்கிய தோலுடம்பு, சுத்த தயா பொன் வடிவாக மாறிவிடும். நித்திய இளமை வந்திடும் என உறுதி கூறப்படுகின்றது.
இனி, செத்தவர்கள் எழும் வல்லபமும் கூறப்படுகின்றது. “நித்தியமாயிருந்தும் கரந்து உரைகின்ற ஆன்மா, தனது உயிர்ச் சக்தியைக் காரியப்படுத்திக் கொண்டு, ஓர் உடம்பில் விளங்கும் காலம், பிறந்து வாழ்கின்றதாகவும், அவ்வுயிரைத் தன்னில் சுருட்டிக் கொண்டு, உடலினின்று பிரிகின்ற காலம் இறப்பு அல்லது மரணம் உண்டாகின்றது என்றும் உலகில் வழங்கப்படுகின்றன.
ஆன்மானுபவம் கை வந்த மகான்கள், தமது ஆன்ம சக்தியை ஓரளவு பிரயோகித்து, மற்றொரு ஆன்மாவின் சுருண்ட உயிர்ச்சக்தியை விரித்து விளங்கச் செய்ய முடிகின்றது, அதனால் இறந்தவர் எழுகின்ற அற்புதம் நிகழ்கின்றதாம், ஆனால் இது பெரிதல்ல! அப்படி மாண்டவர் மீண்டும், மீண்டும் இறந்தே போவர் சிறிது காலத்திற்குப் பின்னர்.
அருட் பூரணத்தில் விளங்குவது, நித்திய ஆன்ம நிலை அது இயற்கையில், மறைந்து புதைந்து கிடக்கின்றதே, அதற்கு இறப்பு நிலையாக, அல்லது இன்னும் பிறந்து வெளிப்படாத கருநிலையாகவே கொள்ளப்படும்.
இந்த நிலையினின்று, அருட்பெருஞ் சக்தியோடு, அக அனுபவத்தில் வெளிப்பட்டு, அனக வாழ்வில் விளங்குவதே உண்மையான “இறந்தார் எழும் நிலை” யாம்.
“இதுவே உண்மையான பிறப்புமாகும்”.
இப்படி எழுகின்றவர்கள், பிறக்கின்றவர்கள் மறுபடியும் ஒருக்காலும் இறவார்கள்.
இந்த உண்மையைத் தான் நம் வள்ளலார் ஒரு வெண்பாவில் குறித்துள்ளளைர். அது இதுவாம்.
“என்னே யுலகில் இறந்தார் எழுதல் மிக
அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
திருஅம்பலவன் திருநோக்கம் பெற்றார்க்கு
உருஅம் பலத்தேயென் றுன்”
என்பதில், உயிர் பெற்று எழுகின்றவர் தம் உருவம், திருவம்பலத்திலே இருக்கின்றதாக அறிய வேண்டும், என்கின்றார்.
“அருள் அம்பலத்தில் வாழ்கின்றவர்கúள இறவாத, உயிர்பெற்று எழுந்த உண்மை அம்பலவாணர்களளைவார்கள்”.
9. பாடல்
களித்துலகில் அளவிகந்த
காலமுல கெல்லாம்
களிப்படைய அருட்ஜோதிக்
கடவுள்வரு தருணம்
தெளித்திடுமெத் தருணமதோ
வென்னாதீர் இதுவே
செத்தாரை யெழுப்புகின்ற
திகழ்தருணம் உலகீர்
ஒளித்துரைக்கின் றேனலனான்
வாய்ப்பறையார்க் கின்றேன்
ஒருசிறிதும் அச்சமுறேன்
உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடுசிற் றம்பலத்தென்
அப்பனருள் பெறவே
ஆசையுண்டேல் வம்மினிங்கே
நேசமுடை யீரே.
உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொண்டதால், ஐயமில்லை, அச்சமில்லை எனத் தெளிவோடு நின்று, வெளிப்படையாக உறுதியாக வம்மின் என்று அழைக்கின்றார், நமது வள்ளல் பெருமான்.
அவர் கண்டு கொண்ட உண்மைதான் யாதோ எனின் “நமது அருட்பெருஞ் ஜோதிபதி, ‘உலகெல்லாம் பேரானந்தம் எய்துதற்காக, இவண் எழுந்தருளி, அற்புதத் திருநடனம் அளவு கடந்த நெடுங்காலம் வரையும், புரிந்து கொண்டேயிருக்க திருவுளங் கொண்டுள்ளளைர்’, என்பதாம்.
மேலும், இதுவே இறந்தவர்கள் எழுந்து வருகின்ற, உற்ற தருணமாகவும் இருக்கின்றதாம். ஆகையால், அவருடைய திருவருளைப் பூரணமாகப் பெற்று, நிறை வாழ்வு மேற்கொள்ள, உங்களுக்கெல்லாம் விருப்பம் இருக்குமாயின், இப்பொழுதே வந்து சேருங்கள் என்று அழைக்கின்றார்.
முன்னோர், நமது ஆண்டவர் வருகை குறித்து, எதிர்பார்த்து இருந்த தருணம், இதுவாகயிருப்பதால், சந்தேகம் சிறிதுமில்லாமல் திட நம்பிக்கையோடு இங்கு வாருங்கள். வந்து திருவருளைப் பெற்றுக் கொள்ளுங்கள் உய்யலாம், உய்யலாம் இப்பொழுதே, என்பது உறுதி மொழியாகும்.
“ஒளித்துரைக்கின்றேனல்ல
நான் வாய்ப்பறை யார்க்கின்றேன்”
என்று குறிப்பிட்டுள்ளளைர் இச் செய்யுளில். இந்த ஞான சரியையின் உள்ள நிலை இதுவாகக் கொள்ள வேண்டும். வாய்ப்பறையார்த்தல் என்ற தலைப்புக்கு ஒரு விளக்க நிலையாக இப்பாமொழி அமைந்து விளங்குகின்றதாம்.
“கற்பனை இல்லை, கட்டுரை இல்லை, இரகசியமோ
தடுமாற்ற நிலையோ, திரிபோ ஒன்றுமில்லை,
வெளிப்படையாகவே சொல்லுகின்றேன். இதுவே
வாய்ப்பான ஒரு நல்ல சமயம் என்று தெரிந்து
கொள்ளுங்கள்” என்கின்றார்.
இப்படியெல்லாம் சொன்ன வள்ளல்பெருமானும், அவர் குறிப்பிட்ட அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் எங்கே? உறுதி வாசகத்தின்படி எழுந்து வந்து அம்பலத்தில் இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றார்களளை? என்றால்;
“ஆமாம், என்றே மறுமொழி
கொடுக்க முடிகின்றது”
எங்ஙனம் எனில், இந்த வாசகம் எந்தக் சஷணத்தில் வாய்பறையாக வெளிப்பட்டதோ, அந்தக் சஷணமுதலே அருட்பெருஞ்ஜோதியே அருட்பிரகாசமாகவும் ஆன்மச்சபை தொறும் எழுந்தருளி விளங்குகின்றார். செயலற (இறந்து) கிடந்த ஆன்மாக்கள் எழுப்பப்படுகின்றார்கள்.
எந்த ஒரு ஆன்மா அருள் உணர்வொடு, உள் விழித்துக் கொள்ளுகின்றதோ, அந்த ஆன்மா, அந்தக் சஷணத்திலே உயிர்த்தெழுகின்றதாகும்.
அப்படி, அருள் நிலை பெறாதவரை இறந்த நிலையில் தான் கிடக்கின்றதாம். இறந்தாரை எழுப்புகின்ற நல்தருணம் ‘இது’ என்றதின் உண்மை யாதெனில்; “சுத்த நிலையில், இராப் பகலற்ற இடத்தில் நம் பதி நித்தியமாக உள்ளளைர். அவ்விடம் நித்த நிகழ்வாய் (உஸ்ங்ழ் டழ்ங்ள்ங்ய்ற்) இறந்த காலம், எதிர்காலம் என்பதொன்றும் இல்லாததாய் இருக்கின்றதாகும்”.
அந்நிலையுற்ற ஆன்மாதான், இந்த வாய்ப்பறை ஆர்ப்பைக் கேட்கின்றது. இதுவே தருணம் என்பதையும் காண்கின்றது. திருவருளையும் பெறுகின்றது. அவ்வருள் அடைவால், பேருறக்கத்திலிருந்து, அக மரண நிலையினின்று, எழுந்துவிடுகின்றதாம். எழுந்து பதியோடு ஒன்றாக விளங்கிக் கொண்டு, அருட்பெருஞ்சித்தெலாம் புரிய உள்ளதாம்.
ஆன்ம நேய ஓருரிமையாக எல்லோரும் இருப்பதால், இந்த வாய்ப்பறை மொழியைக் கேட்பது உண்மையாகும். கேட்டு, அவ்வருட் பெரு நிலையைப் பெற வேண்டுமென, குற்றமற்ற ஆசைகொள்வது யாவருக்கும் பொருந்தும். ஆகையால், அந்த, நல்ல ஆசை உண்டாகி உள்ளது ஒவ்வொருவர் உள்ளத்திலும்.
அபக்குவ வசத்தால், அது மனோ நிலைக்கு இறங்காததால், அவ்விருப்பம் ஏற்படாது இருக்கலாம். எனின், பக்குவம் உண்டாகும் போது அது விளங்கும். அந்த ஆசை கடவுள் ஆணை என்றே அறிந்து கொள்ள வேண்டும். கொண்டால் தான் அருட்பெரு நிலையுற்று ஆனந்திக்கலாம்.
10. பாடல்
ஆசையுண்டேல் வம்மினிங்கே
அருட்ஜோதிப் பெருமான்
அம்மையுமா யப்பனுமாய்
அருளும்அரு ளளைளன்
ஏசறநீத் தெனையாட்கொண்
டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன்
என்னுயிரிற் கலந்தான்
தேசுடைய பொதுவிலருட்
டிருநடனம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும்
திருநாளிங் கிதுவே
மோசவுரை எனநினைத்து
மயங்காதீர் உலகீர்
முக்காலத்தினு மழியா
மூர்த்தமடைந் திடவே.
அவரது ஆணையும், நமது ஆசையும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு எய்த வேண்டும் என்பதே ஆகும். ஆகையால், இவ்விடம் வந்து பாருங்கள். நமது அருட்ஜோதிப் பெருமான், அம்மை அப்பனாகி விளங்குகின்றார் எனது சோர்வையெல்லாம் போக்கி, ஆட்கொண்டு, திண்ணியன் ஆக்கி, எண்ணியதை எண்ணியாங் களிக்கின்றார்.
எல்லாம் வல்ல சித்தன் என்னுயிரில் கலந்து பொது நடம் புரிகின்றார். “இத் தேசுடைய பொது நடனம், அதாவது, அருளறிவில் விளங்கும் செயலொடு கூடிய காட்சி, திருவருளளைல் என்றும் விளங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. எனினும், இது சாதாரண மனிதர்களின் புலனுக்குத் தெரிகின்றதில்லை.
இப்படி “உண்மை விளங்காத காரணத்தால், அது உண்மையல்ல, பொய், ஏமாற்றுச் சொல் என்றெல்லாம் கருதிவிடக்கூடாது” என்று எச்சரிக்கன்றார். மேலும் அறியாமையினால், உண்மையைப் பொய்யென்றும், பொய்யை மெய் என்றும் மோசம் போக வரும்.
ஆகையால், நல்லொழுக்கத்துடன், சத்விசாரத்தில் இருந்து கொண்டிருந்தால், இது உண்மை, அது பொய் என்று உள்ளவாறு அறிந்து கொள்ள முடியும். மயக்கம் ஒன்றுமில்லாது, தெளிவோடு இருந்து, உண்மை நெறியில் நடக்கக்கூடும்.
இச்சுத்த சன்மார்க்க நெறியில் நடந்து சென்றால் முடிந்த குறிக்கோளை அடையலாம். அந்தக் குறிக்கோள் தான் யாதோ? எனில்
“முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைதலாம். அதாவது, அகமிருக்கும் கடவுள் வடிவத்தை உள்ளத்துணர்வில் கண்டு, அடைந்து, அனகமாக (உலகில்) நிலைத்து வாழற்கான முறை அதுவாகும்”.
அந்தக் கடவுள் வடிவம் எக்காலத்தும் இருக்கின்ற ஒன்றாகும். அப்படி இருக்கின்ற அக்கடவுளை, இப்பொழுதே உண்மையாகக் காண்கின்றோம். “கண்டு அதுவாக நிலைக்கும் அனுபவம் உண்டாகின்ற போது, நாமே, அந்த எக்காலத்தும் இருக்கின்ற பரம் பொருúளளைடு, எக்காலத்திலும் பிரிவற இருக்கின்றதாகவே, உள்ளபடி அறிகின்றோம்”.
இந்நிலை நின்று நோக்கும் போது தான், நாம். இப்பொழுது இருக்கின்றோம், இதுவரையும் தெரிந்து கொள்ளளைத போதும் இருந்து கொண்டு தான் இருந்தோம் இனியும் இருந்து கொண்டே இருப்போம் என்பது உறுதியாம்.
ஆகவே, முக்காலத்தினும் அழியாத் திருவுருவம் அடைய இதுவே சமயம் என்று திண்ணமாய் அறிந்து கொள்ளுவோமாக.
“நமது அருட் ஜோதிபதியே, நமக்கு அம்மையுமாய் அப்பனுமாய் அருள்கின்றார்” என்பதின் விளக்கம் ஈண்டு காண்போம்.
மனிதப் பிறவி கொண்டு விளங்குகின்ற நமக்கு இத்தேகம் எப்படி கிடைக்கப் பெற்றுள்ளது என்றால், கடவுள் நியதி ஆகிய விதிப்படி சூழப் பெற்றுள்ளது. அந்த அருள் நியதியால், ஓர் ஆணில் சுக்கிலத் துளியில் ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்தோம். பின்னர் ஒரு பெண்ணின் சுரோணிதத்தோடு கலந்து, கருப்பிண்ட வடிவம் சூழ, வளர்ந்து வந்தோம். அக்கரு உயிர்த்த காலத்தே இவ்வுலகில் வெளிப்பட்டோம். இது காலம் வரை வளர்ந்து கொண்டுள்úளளைம்.
ஆகவே, அகவடிவில், அருட்பதியோடு கூடி இருக்கின்ற நாம், என்றும் இருக்கின்றோம். அந்தப் பதி அருúள முதலில் ஒரு தந்தை என்பானது சுக்கிலத் துளியில் இருத்தியதாயும், ஒரு தாயின் வண்ணமாக வந்து கூடி கருவேற்றதாயும் அறிகின்றோம். ஆகவே, நம் பதியே, திருவருட் சக்தியால் ஒரு தந்தை, ஒரு தாய் வடிவம் கொண்டு கூடினதும் உண்மையாகவே உணர்கின்றோம்.
இதனால் தான், அம்மையுமாய், அப்பனுமாய் அருளும் அருளளைளன் நமது ஆண்டவர் ஒருவரே என்பது தெளிவாம்.
இனி, “எல்லாஞ் செய் வல்ல சித்தன் என்னுயிரிற் கலந்தான்” என்பதன் உண்மையை சற்று உற்று நோக்குவோம்.
உயிர் என்பது, உயிர்ப்புக் காற்று வடிவாகிய ஜீவன் என்பது இந்நாள் வழக்கு. உண்மையில் உயிர், “உயிர்க் காற்றுக்கு ஆதாரமாகிய ஆன்மாவையே கொண்டிருத்தலால், உயிர் என்றால் ஆன்மாவேயாம்”.
இந்த ஆன்மா கடவுட் கலப்புடையது தானே! ஆகையால் தான், அந்தக் கடவுளளைகிய எல்லாம் வல்ல சித்தன் என்னுயிரில் கலந்தான் என்ற உண்மை இப்போது கண்டு கொள்ளப்படுகின்றது. “அனாதியே உயிரிற் கலந்திருக்கும் அவன் மெய்யருள் அனுபவம் உண்டாகின்ற போது, ஜீவதேகத்திலும் நிறைந்து கொள்ளுகின்ற அனுபவமும் ஏற்படுவதாம்”.
11. பாடல்
அடைந்திடுமின் உலகீரிங்
கிதுதருணங் கண்டீர்
அருட்ஜோதிப் பெரும்பதியென்
அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம்
களித்தருத்தி எனக்கே
காணாத காட்சியெலாங்
காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசா ரலையாதீர்
சுகமெனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென்
றெண்ணுகிலே னுரைத்தேன்
உடைந்தசமயக்குழி நின்
றெழுந்தணர்மி னழியா
ஒருநெறியாம் சன்மார்க்கத்
திருநெறிபெற் றுவந்தே.
“அருட் ஜோதிப் பெரும்பதி என் அப்பன் வருகின்ற தருணம் இதுவே” என நன்கு அறிந்து கொள்ளுங்கள். அறிந்து உடன் இங்கு வந்து சேருங்கள், என அழைக்கின்றார் நம் வள்ளல். அந்த அருளப்பன் இச்சமயம் இங்கு எழுந்தருளி திருவருள் பாலிப்பது சத்தியமாகும்.
அருட்ஜோதி ஆகிய பால் பிரையிடப்பட்டுள்ளது. நமது அகத்தே.
“தயா விசாரத்தால் கடைதல் செய்து,
கருணை அமுதம் பெறற்கு
உதவுகின்றார்” (சுத்த தயவை)
அவ்வமுதத்தை உவந்து அளித்து உண்பிக்கின்றார், அவ்வுணவால் காணாத காட்சியெல்லாம் காண்கின்றேன் ஆம், சுத்த சத்துவ உணவினால், நல்ல காட்சியும் அனுமும் உண்டாகும்.
அசுத்த ஆகாரத்தால் கொடிய காட்சிச் சூழலும் நோயும் துன்பமுமே உண்டாகும்.
“காணற்கரிய கடவுட் காட்சியைக் காணவேண்டின், கருணை அமுதமே உண்டு களித்திருத்தல் வேண்டும்”. உண்மையில், நானே நீங்கள் யாவருமாயிருக்கின்றதால், என் போன்றே இன்ப நிலையை, நீங்களும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று அலாவுகின்றேன். நீங்கள் உங்களையே அறியாமல் இவ்வுலகிடை சார்ந்து உழன்று கொண்டிருக்கின்றீர்கள்.
நீங்கள் பலப்பலவாகிய சமயங்களைப் போற்றிக் கொண்டு, காலத்தைப் போக்குகின்றீர்கள். உண்மையில், இந்த இடத்தில், இந்த தருணமே, அருள் உண்மை விளங்க, அனுபவப்படுவதாய் உள்ளதால், இதுவே தக்க சமயம் எனக் கொண்டு உய்யுங்கள்.
மற்ற மற்ற சமயமதங்கள் எல்லாம் புறப் பிழைப்பில் ஏகதேச பலனீந்து ஒழிவனவே. பழஞ்சமய நெறிகள் யாவும் உடைந்த நிலவறைகளளைகக் குழியிடத்து உள்ளன. அந்தக் குழியறையில் உண்மை விழிப்படையாது மாயப் பெருந்துயிலில் பொய்க் கனவு கண்டு கொண்டே இருக்கின்றீர்கள். அந்நிலையில் காண்கின்றனவும், அனுபவிக்கின்றன யாவும் பொய்த்துப் போகும்.
ஆதலின், “முதலில் விழித்தெழுமின்; விழித்துக் கொண்டு உண்மையை உணர்மின்; உணர்ந்து இந்த அருள்மயமான சுத்த சன்மார்க்கத்தை சார்மின்”.
விழிப்பு உண்டாகிய போதுதான், “நீங்கள் இதுவரை உறங்கிக் கொண்டு கிடந்த இடம் உடைந்த சமயக்குழி” என்பதை நேரடியாகக் காணமுடியும். அப்போது, அதனிடத்து அருவருப்பு கொள்வீர்கள்.
அவ்விடத்தினின்றே உள்ளுறத் திருவருளை வேண்டினால், உடனே “அவ்வருள் வந்து அரைக்கணத்தில் உங்களை, சன்மார்க்கப் பெருநெறியாகிய ராஜபாட்டையில் செலுத்திவிடும்.” அதில் மகிழ்வோடு நடந்து சென்று ராஜகிருகம் என்னும் அருளம்பலத்தை அடைந்து ஆனந்திக்கலாம்”.
12. பாடல்
திருநெறியொன் றேஅதுதான்
சமரசசன் மார்க்கச்
சிவநெறியென் றுணர்ந்துலகீர்
சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியி லெனையாட் கொண்
டருளமுத மளித்து
வல்லபசத் திகùளல்லாம்
வழங்கியவோர் வள்ளல்
பெருநெறியிற் சித்தாடத்
திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினோடு
வருதருண மிதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர்
கலக்கமடை யாதீர்
கண்மையினாற் கருத்தொருமித்
துண்மையுரைத் தேனே.
பழையனவாகிய கற்பனா நெறிகள் எல்லாம் கரு நெறிகúளயாம். அவற்றில் கிடந்து உழன்று கொண்டிருக்க வேண்டாம். சுழன்று திரிந்து கலக்கமடைய வேண்டாம்.
“கணமை எனும் தயா ஒருமையோடு
இரக்கங் கொண்டு உங்களை வர
வேண்டுகின்றேன். உவப்புடன் வர
வேற்கின்றேன். வாருங்கள்! வாருங்கள்!”
சுத்த சன்மார்க்கத் திருநெறி ஒன்றே நெறி என்று அறிந்து கொள்ளுங்கள். அதுவே சுத்த சிவ நெறியாகத் தேர்ந்து, தெரிந்து கொள்ளக் கடவீர்கள்.
சத்து, சித்து, ஆனந்தமாய்த் திகழ்கின்ற மெய்ப்பொருளை திருவருளளைல் கண்ட பெருஞ்சித்தர்கள், யோகானுபவ சித்தி பெரும் பொருட்டு, அந்தக் கடவுள் உண்மையைச் சுட்ட,‘சிவம்’ என்ற ஓர் அற்புதச் சொல்லைக் கற்பனையால் ஆக்கித் தந்தார்கள்.
“அந்தச்சொல் ஓர் உபாயக் கருவியே. அது கொண்டு உண்மையை அறிய வேண்டுவதே முக்கியம். உண்மையை அறிந்து அந்த முடிவான சச்சிதானந்த அனுபவம் பெறுதலே முக்கியத்தினும் முக்கியமாகும்”.
அடைய வேண்டிய இக்குறிக்கோளை மறந்து விட்டுச் சிவம் என்றதைச் சொல் வடிவிலும், மந்திர ரூப ஆற்றல் வடிவிலும், விக்கிரக மூர்த்தி வடிவிலும், குரு மகா சந்நிதானமாகிய வேஷக் கோலத்திலும் கண்டு போற்றிக் கொள்ளும் போது, உலகோடு சமரச சகோதரத்துவ பாவத்தோடு பழகமுடியாமல் போகின்றது. சுத்த சிவானுபவத்தின் இலட்சியமான சச்சிதானந்த வாழ்வு பெறக்கூடாமலும் போகின்றது.
ஆகையால், உண்மையும், அனுபவ இலட்சியமும் அறியப்படாது, சிவத்தைப் புல்லறிவால் புல்லி நின்று (தழுவி நின்று) அழிவுபடுதல் திருவருளளைணை அன்றாம். எனவே, சிவம் என்ற கற்பனைச் சொல்லை, ஒன்று, பூரணப் பொருளறிந்து ஏற்க வேண்டும். அல்லது அந்தப் பொருளையே நேரடியாகக் காட்டிக் கூட்டி வைக்கும் ஒரு சொல்லை ஏற்றுக் கொள்ளுதல் பொருந்தும்.
“கடவுள் தயவால் ஒரு சொல் வழங்கப்படுகின்றது. அது ‘தயவு’ ஆகவே கண்டு கொண்டுள்úளளைம். இந்தத் தயவே, சத்து, சித்து, ஆனந்தமாம்”.
தயவுடன் கூடிய ஒழுக்கத்தினாலும், தயவு மயமான சுத்த சத்விசாரத்தாலும், தயவினால் சாருகின்ற சுத்த தயா இன்ப வாழ்வினாலும் முடிந்த சச்சிதானந்த அனுபவத்தைக் கொண்டு இவ்வுலகில் நிலவக் கூடியதாய் இருக்கின்றதாம்.
ஆதலின், சிவத்தை இப்பொழுது தயவாகக் கொள்ளுதலின், நஷ்டமொன்றும் ஏற்படுவதாயில்லை. நமக்கு வேண்டுவது மெய்ப் பொருளும் அனுபவமுமே அல்லாது வெற்றுச் சொல்லானந்தம் அல்லவே!
கற்பனை கடந்த மெய்ப் பொருளை உலகம் எல்லாம் ஏற்று, பயன் பெற வேண்டும், என்பதுவே திருவருள் ஆணையாகும். சிவ சன்மார்க்கம் தயா நெறியாக எங்ஙணும் பரப்பப்படல் வேண்டும். எவரும் தடையின்றி ஏற்பர். இத் தயா பெரு நெறியே, சிவ நெறியாம் திருநெறியாகக் கொண்டு வம்மின் உலகீரே என அழைக்கின்றார் நமது வள்ளல்.
வருநெறியில் எனை ஆட்கொண்டு அருளமுதம் அளித்தார், எனப்படுகின்றது. இதன் விளக்கம் யாதெனில் இதுவரை இருந்த மார்க்கமெல்லாம் பயன் தராது போயின. இத்தருணம் வெளிப்படுகின்ற இச் சுத்த சன்மார்க்கம் ஒன்றே மெய்ப்பயன் வழங்க வருகின்றது. ஆதலின், இதுவே “எதிர்காலத்தில் எங்கும் ஏற்கப்படும் ஒரு பொது நெறியாக விளங்கவல்லதாம்.”
இனி, இது உலகமெல்லாம் காண, வரப்போகின்றதால் “வருநெறி” என்று குறிக்கப்படுகின்றதாம். இனி மேல் பரவப் போகின்ற இந்த சுத்த நெறி நமது வள்ளல் பெருமான் உள்ளத்தில் வெளிப்பட்டது. அங்ஙனம் வெளிப்பட்டதும், அவர்க்கு அருள் அமுதம் அளித்து, அருள் வல்லப சித்திகள் பலவும் வழங்கி விட்டதாம்.
சச்சிதானந்த பதியாகிய தனிப்பெருங் கருணை வள்ளல் தானே, அருள் அம்பலத்தே அருட் பெருஞ் ஜோதித் திருவுருக் கொண்டு எழுந்தருளுகின்றார். எதற்காகவெனில், அருட்பெரு நெறியை உலகில் வெளிப்படுத்தற்காம். அந்த சுத்த நெறியை உலகெங்கும் ஏற்கச் செய்கின்றதே பெருஞ்சித்தாகும். அவர் செயலாக அற்புதம் பல நிகழும்.
பழையனவற்றில் பற்றொழிந்து, உள் மலரும் உண்மை நெறியில் பற்று கொண்டு ஓங்க, எல்லோருக்கும் கருணை பாலிக்கின்ற தருணம் இதுவாக இருக்கின்றதாம்.
“கரு நெறி என்பதற்கு விளக்கம்” அறியாமை இருள்மய நெறியென ஒருவாறு கொள்ளலாம். பழைய புலனெறிகளளைல் உண்மை விளங்கவில்லை. அறியாமை இருள் நீங்கவில்லை. சுத்த நித்த இன்பம் தோன்றவில்லை. அக்கருமை தூய வெண்மையாக அருள் ஒளியால் மாற வேண்டிய தருணம் இதுவாகச் சூழ்கின்றதாம்.
மேலும், கருநெறி என்றது, அபக்குவ வினை வசத்தால் மேலும் மேலும், சராயு என்னும் கருப்பையிற் சென்று சென்று, பல்வேறு அவத்தைகள் பட்டுப்பட்டு, பிறப்பதும் இறப்பதுமாய் உள்ள சகமார்க்கமே கரு நெறியாகக் கொள்ளப்படும்.
அன்றியும், பிறவாகிய, யோனி பேதங்களில் அனந்தம் பிறவிகளில் தோன்றி, அவத்தை உறுவதும் கரு நெறி வாழ்வே. அன்றியும், ஆன்மாவாகிய கருவின் உண்மையைக் கண்டு, அந்நிலைக் கண்ணுற்று ஒடுங்கச் செய்யும் பழமையான யோக ஞான மார்க்கங்களும் கூட இன்று கரு நெறியாகவே உள்ளனவாகக் காண்கின்றோம். இதில், ஆன்ம சக்தியால், அற்புத சித்தி கொண்டு சிறிது காலம் உலகத்தில் உலவி விட்டு, முடிவில் அவ்வான்மாணுக் கருவில் ஒடுங்கி மறைந்து போகவே நேர்ந்தனவாம்.
ஆகையால், அக்கரு நெறியிற் சென்று அடையப் பெறுகின்ற முடிவு நிலையில் ஆனந்தானுபவம் சிறிதும் விளங்காது, ஒரு பயனுமின்றிக் கெடுகின்றதாம். எனவே, இக் கரு நெறியிலும் இடறி விழுந்து விடாதீர்கள் என எச்சரிக்கப்படுகின்றோம்.
இப்படியான கருநெறிகளை எல்லாம் விடுத்து, சுத்த தயா மயமான கருணை நெறியிற் செலுத்த வேண்டி, நமது பதியே அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வடிவினராய், உள் ஞான சபையில் எழுந்தருளிப் பெருங்கருணை பாலிக்கின்ற தருணம் இதுவாக உணர்த்தப் படுகின்றோம்.
ஆதலின், உடனே இவ்விடத்திற்கு வந்து திருவருளைப் பெற்றுக் கொள்ளுங்கள். காரிருள் சேராக் கருணை நெறியால் நன்மையெல்லாம் பெற்று நனி மகிழ்ந்து வாழலாம்.
13. பாடல்
உண்மையுரைக் கின்றேனிங்
குவந்தடைமின் உலகீர்
உரையிதனில் சந்தேகித்
துளறிவழி யாதீர்
எண்மையினா னெனநினையீர்
எல்லாஞ்செய் வல்லான்
என்னுளமர்ந் திசைக்கின்றான்
இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ
சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ
சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரு மொருபெருஞ்சீர்க்
கடவுùளனப் புகலும்
கருணைநிதி வருகின்ற
தருணமிது தானே.
தயா வள்ளலென்றும், கருணா மூர்த்தி என்றும் கருணை நிதி என்றும் கூறப்படுகின்ற நமது ஆண்டவர் வருகின்ற தருணம் இதுவாக உள்ளதாம்.
அவர், நமக்குக் கண்மை (தயவு) வழங்கப் போவது உண்மையாம். அந்தத் தயவு நமக்குச் சத்திய வாழ்வு என்னும், சுத்த சுகானந்தப் பெருவாழ்வு வழங்கப் போகின்றதும் உண்மையாம்.
நான் உண்மையே சொல்லுகின்றேன், ஏமாற்று மொழியல்ல. மோசக் கருத்துடைய உலகிகள், ஒருகால், உண்மை போல பொய்யையே மிக அழுத்தமாய் உரைப்பார்கள். (அ) சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் என, அகர ஒலியை வாயில் நிறுத்திக் கொண்டு, உச்சரித்து, ஏமாற்றி விடுவார்கள்.
அப்படியல்ல, எனது உரை உண்மையேயாகும். இதில் சிறிதளவும் ஐயம் கொண்டு முரண் சொல்லித் திரியாதீர்கள். உள்ளத்தில் தெளிவு இல்லாமல், பலர் கூறும் உரைகளை நிறைத்துக் கொண்டு, அவற்றையே திரும்பத் திரும்ப, நினைவு கூர்ந்து கொண்டிருந்தால், அவையே அடிக்கடி வெளிப்படும். உண்மை அல்லாத உள்ளத்தின் அலறலாக, உளறலாகத்தான் வெளியாம்.
ஆகையால், பிறவற்றை உளங் கொண்டு, உளறிக் கொண்டு அலையாதீர்கள், என அறிவுறுத்துகின்றார். நம் வள்ளல், எனது உள்ளத்திலிருந்து உரை தருகின்ற வள்ளல் எப்பேர்ப்பட்டவரென்று அறிவீர்களளை? எண்மையினான் (எளிமையானவன், இலேசானவன்) என்று கருதி விடாதீர்கள். அவன் எல்லாம் செய்ய வல்லவனாவான் அப்பெருமையன் தான் என்னுள் இருந்து இசைக்கின்றான்.
“அவன் சொல்லுகின்றததைக் கேளுங்கள்” இது வாயினால் சொல்லுகின்றதைக் காதினால் கேட்டு விட்டால் போதும், என்பதல்ல பொருள். கேட்டு அதன்படி நடத்தல் வேண்டும் என்பதுவே கருத்தாம்.
“தண்மை” குளிர்ந்த அன்பு நிலையாம். அந்த அன்பின் குளிர்ச்சி, இரத்தம் குளிர்ந்தும், உடல் குளிர்ந்தும் இருக்க உதவும். அப்படி இருந்தால் தான் “சத்துவ குண சம்பந்த கடவுள் விளக்கம்” உண்டாகும்.
இல்லாத பட்சத்தில், வன்பு வளரும் நெஞ்சில் வெம்மையே ஓங்கலின், தேகமுற்றுமே தகித்துக் கொண்டிருக்கும். தாமச குணமும், ராசத குணமும் அதிகரித்து கடவுள் விளக்கம் மறைந்திருக்கச் செய்யும். ஆகையால், தயவுத் தன்மையுடன் சுத்த சன்மார்க்கத்திற்கு வாருங்கள். இந்நெறியில் விரைந்து மேலேறலாம். ஏறி மேனிலைக்கு வந்தால், மேற்குறித்த சத்திய வாழ்வு வழங்கப் பெறுவீர்கள்.
ஆதலால், இங்கு நீங்கள் எல்லோரும் ஆர்வத்தோடும், உள்ள விருப்பத்தோடும் வர வேண்டுகின்றனன். சும்மா மேலும் மேலும், அழைத்து அழைத்து சதா நச்சுகின்றானே என்று, வேண்டா வெறுப்போடு, போய்த்தான் பார்க்கலாமே என்று அசட்டையாக வரக்கூடாது. நல்ல முழு நம்பிக்கையோடு, உளமகிழ் விருப்பத்தோடு வரவே வேண்டுகின்றனன். அப்படி வந்து சுத்த சன்மார்க்கத்தில் நடந்தால், நிச்சயம் பெருநலம் பெறுவீர்கள்.
எண்மையினான் என்பதற்கு, எளிய இழிநிலையுடையவன் என்பது ஒரு பொருளளைய் மேலே குறிக்கப்பட்டது. அத்தோடு, எண்ணுந் தன்மையான் என்றுங் கொள்ளலாம். அப்படிக் கொள்ளும் போது, நினைப்பார் நினைக்கின்ற வண்ணம் தோன்றக் கூடியவன் என்றும் பொருளளைம்.
அன்றியும், எண்மை என்பது எண்ணிக்கை அளவையும் குறிக்கும். ஆகவே, ஈண்டு குறிப்பிட்டிருந்தபடி, நம் பதியை எண்மையினான் என நினையீர் என்பதற்கு, எளியன் என்றும், இழிவுடையவன் என்றும் எண்ணியபடியெல்லாம் தோன்றும் வடிவுடையவன் என்றும், இவ்வளவு என்ற கணக்கில் அடங்குபவன் என்றும் கூறப்படாதாம்.
அவன் எல்லாம் வல்லவன். எனினும் பிறர் படுந் துன்ப நிலை கண்டும் ஒன்றுஞ் செய்யமாட்டாதவன் போல் அசக்தன் போல் இருக்கின்றதும் காண்கின்றோம். பெருமைகட்கு இருப்பிடமாய் பெருமானாய் இருந்தும், இழி செயல் புரிகின்றோனின் உள்ளிருந்து அவனாயும் விளங்கலின், அவன் இழிவுடையவன் தானோ!
கருதுவார் கருத்தில் தோன்றுவதெல்லாம் நிலைக்காது ஒழிகின்ற வடிவமாயுள்ளதே, ஆதலின் எந்த வடிவத்தை அவனுடைய உண்மையான வடிவமாகக் கொள்வது? எண்மையுரு அவனுக்கெதுவோ?
மேலும், எண்ணளவையில் அடங்கானேனும், அணுத்துவமான சிற்றம்பலத்தே அடங்கி நின்றாடுகின்றதாக கூறப்படுகின்றதே! ஆட்டுக்கு வால் அளந்து வைத்துள்ளதாகச் சொல்லப்படுகின்றதே! ஆன்ம அணுவில் அகிலாண்ட நாயகன் அடங்கி நின்றாடும் அளவை என்னென்பதோ!
ஆகவே, எண்மையினான் என நினையீர் என்றதற்கு உடன்பாட்டுப் பொருளளைகவும் கொள்ளலாம், எதிர் மறைப் பொருளளைகவும் கொள்ளலாம். இரண்டு வகையினும் பொருத்தமாகவே திகழ்வதாகும். இதுதான் எல்லாம் வல்ல கடவுளின் அற்புதத் தன்மையாகும்.
இக்குணத்தால் தான், ஆண்டவரைக் குறித்துச் சொல்லும்போது, “எல்லாமானவர் என்றும் ஷ் ஒன்றும் அல்லாதவர் என்றும், ஏகர் என்றும் ஷ் அநேகர் என்றும் சிற்றணுவினுஞ் சிறியன் என்றும் ஷ் பெருமகத்தினும் பெரியோன் என்றும், பித்தன் என்றும் ஷ் எல்லாம் வல்ல சித்தன் என்றும்”, இன்னும் பலவாகக் கூறப்படுகின்றார்.
இப்படியாக உள்ள ஆண்டவர் ஒருவரேயாவர். இவரைப்பற்றி, சுத்த சன்மார்க்கத்தில் தான் உண்மையாகக் கண்டு கொள்ளலாம். திருவருளளைலே அந்த ஒன்றான கடவுளையே கண்டு, உரைக்கின்றார், திருவருட் பிரகாசப் பெருமான்.
“அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தானே, அவ்வருட் பிரகாச வள்ளலுருவம் கொண்டு, நின்று, உரைக்கின்றார்.” இவ்வுண்மையை தீர்க்கமாகத் தெளிவுறக் கண்டு கொண்டால், இந்த ஞானசரியையின் குறிக்கோள் சித்திக்கும்.
எந்த ஒன்றான அருட்பெருஞ் ஜோதிபதியைத் தன்னகத்தில் தானாய் நம் வள்ளற் பெருமான் கண்டு கொண்டுள்ளளைரோ, அந்தப் பதி ஒருவர்தானே, நம்மிலும் நாமாய்த் தனித் தனி விளங்குகின்றது, அருட் பேரற்புதத்திலும் அற்புதமாக உள்ளதாம். அப்பதி ஒருவரே, தம் அருளையே நம் அறிவாக்கி, இவ்வறிவால் அவ்வருட் பதியையே கண்டு கொள்ளச் செய்கின்றார்.
ஆகவே, நாம், நாம் எனத் தனித்தனி புறத்தே விளங்குவதெல்லாம் அந்த ஒருவரின் அருளற்புத நிலையே ஆகும். அத்திருவருள் அனுபவத்தால் நாம் என்ற ஆணவ நிலை போகின்ற போது, நாம் என்றதே அந்த அருட்பெருஞ் ஜோதிபதி வடிவாய்த் திகழ்வதாம். அந்நிலையில் நாம் என்றும், அதுவென்றும் பிரித்தறியக் கூடாத கடவுள் அனுபவம் விளங்குவதாம்.
இந்நிலைக் கண் ஏற்றி வைத்தற்கு, வாழ்வில் விளங்குவதற்கு என்றே, வள்ளல் வாய்ப்பறை யார்த்து, அருள்முரசு அறைந்து, அழைத்துக் கொண்டிருக்கின்றார். அவர் உரையே, ஆண்டவர் உரையாக ஐயம் திரபறக் கொண்டு அம்பலம் அடைதல் வேண்டும். அடைந்தால், அருள் சேரும், அம்பலப் பெருவாழ்வு நேரும்.
14 பாடல்
தானேதா னாகியெல்லாந்
தானாகி யலனாய்த்
தனிப்பதியாய் விளங்கிடுமென்
தந்தையையென் தாயை
வானேஅவ் வான்கருவே
வான்கருவின் முதலே
வள்ளளைலென் றன்பரெலாம்
உள்ளளைநின் றவனைத்
தேனேசெம் பாகேஎன்
றினித்திடுந்தெள் ளமுதைச்
சிற்சபையில் பெருவாழ்வைச்
சிந்தைசெய்மின் உலகீர்
ஊனேயும் உடலழியா
தூழிதொறு மோங்கும்
உத்தமசித் தியைப்பெறுவீர்
சத்தியஞ்சொன் னேனே.
“உண்மையில் இருக்கின்ற அருட் ஜோதிப் பெரும்பதி ஒருவரே” என்று அறிந்து கொண்டுள்úளளைம். ஆனால், அந்த ஒருவர், ஒரு வடிவில், ஓர் இடத்தில், ஒரு காலத்தில் மட்டும் இருக்கின்றவர் அல்ல.
“எல்லா வடிவங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் இருப்பவரே ஆவர்”. இப்படி இருத்தலே அவர் தம் அருட் பெருமையாகும். ஒன்றான அவர் எல்லாந்தானாகி, ஒன்றுந்தான் அலனாய் இருக்கும் தன்மையை சற்று ஓர்ந்து அறிதல் வேண்டும்.
நம் சத்திய ஞான சபையிலே, அருட்பெருஞ்ஜோதியாய் விளங்குகின்ற கடவுள் ஒருவரே உண்மையில் இருக்கின்றார். அவர்தம் அருட் பெருமையை நமக்கு அனுபவத்தில் வழங்குதற்பொருட்டு, (அகமாகிய) அனந்தங்கோடி ஆன்மாவாய் உலகெங்கும் நிறைந்து நின்று அனந்த வண்ண பேதப் புற வடிவங்கள் கொண்டு சூழ்கின்றார்.
இது தான் “தானே தானாகி இருக்கும் அக நிலையும், உலகிலுள்ள எல்லாம் தானாகி உள்ள தோற்ற நிலையும்”. தோன்றிய வடிவங்களில் எல்லாம் உள் மறைந்து இருத்தலின், தான் எதுவும் அல்லனாயும் இருக்கின்ற நிலையுமாக அறியவுள்ளனவாம்.
எனவே, நம்மில் நாமாய் விளங்கும் பதி ஒருவரே, எல்லா வடிவத்தும், எல்லா இடத்தும், எல்லாக் காலத்தும் இருப்பதாக, சத்திய ஞானத்தால் காண்கின்றோம். இந்த ஞானம் வராதபோது ஒன்றான கடவுள் உண்மை கொஞ்சம் விளங்காது.
இந்த ஒன்றான கடவுúள, ஒப்பற்ற தனித் தலைமைப் பெரும் பதியாய் விளங்கிக் கொண்டுள்ளளைர். தானே நானான நிலையில் விளங்க நேரும் போது, தனது அருட்சக்தியால், எனக்கொரு தந்தை, தாய் உருவாய்த் தோற்றிப் புணர்ந்து, இந்த மனித தேகம் கொண்டு விளங்கச் செய்துள்ளளைன். இப்பொழுது, இத் தருணத்தில் இத்தேகச் சூழலில் “தானே நானான”உண்மையைக் காட்டிக் கொடுத்திருக்கின்றதாம்.
அவன், வானாய் இருக்கின்றான். வான் கருவாய் இருக்கின்றான்; அவ்வான் கருவுக்கு ஆதாரமாயும் இருக்கின்றான் எனப்படுகின்றது. அதாவது நம் அருட் ஜோதிபதியே ஆன்மக் கருவாய் எல்லா அணுக்களிலும் ஆதாரமாயுள்ளளைர்.
அவ்வான்ன சிற்றணுவில் இருக்கும் நம் அருட் பெரும் பதி ஆன்மாகாச வெளிக்குக் காரணமாயுள்ளளைர். இந்த ஆன்மாகாச வெளிக்குக் காரணமாயுள்ளளைர். இந்த ஆன்மாகாசத்தில், பூதாகாசம் எல்லாம் அடங்கி உள்ளதால் இவ்வான்மாகாசம், அப் பூதாகாசத்திற்குக் கருவாயிருக்கின்றது. ஆகவே, கடவுள் தானே பரமாகாச வண்ணராய், ஆன்மாவுக்குக் கருவாய் அமைந்துள்ளதும் அவ்வான்மக் கரு, புற ஆகாசத்தைத் தன்னுட் கொண்டுள்ளதும் அறியலாகின்றன.
முடிவாக, வானாகியுள்ளதும், அவ்வான் அடங்கிய ஆன்மக் கருவாகியுள்ளதும், அக் கருவுக்கு முதலாகி உள்ளதும் நம் பதியே என்ற தெளிவுறலாம்.
இந்த நம் பதியே ஒப்பற்ற பெரு வள்ளலாவர். எல்லோருக்கும், எக்காலத்தும், வேண்டியவை எல்லாம் இல்லை என்னாமல், சற்றும் தடைபடாது, வழங்குவது தான் கடவுட் பெரு வள்ளன்மை ஆகும்.
இப்பெற்றி சிற்றணு அளவே உடையனவாய், சிறிது காலம், சில பலருக்குத் தன் பொருள்களை வழங்குகின்ற ஒருவனை வள்ளல் என்று உபசரித்துக் கூறுவது உலக வழக்கம். “நமது அருட் ஜோதி வள்ளலே தனிப் பெருமை கொண்டு, என்றும் விளங்கித் தன் வள்ளன்மையைப் போற்றிக் கொள்வோர்க்கு மிகுதியாகக் காட்டுகின்றார்“”.
அருள் வள்ளல், நமது உள்ளத்தை நன்கு அறிவார். நம் உண்மைத் தேவையை உடனுக்குடன் அளித்து வாழ்விக்கின்றார். உலக வள்ளல்கள் போன்று, அறியாமைச் செருக்காலும், சிற்றுடைமையாலும், மற்ற பல குறைபாடுகளளைலும், பிறர்க்கு, ஏதோ வேண்டுவதை ஏகதேசம் கொடுத்து மகிழ்விப்பவர் அல்ல நம் வள்ளல்.
எல்லாம் வல்லவராய், எல்லாம் நிரம்பியவராய் இருக்கின்ற நம் கருணை வள்ளல், அன்பு உள்ளம் படைத்தவர்க்கு வேண்டுவன எல்லாம் வழங்குதலன்றி, வேண்டாதவர்கட்கும், ஏனைய பிற உயிர்கட்கும் தேவைகளை அறிந்து வழங்கிக் கொண்டே இருக்கின்றார்.
அன்றியும், தன்னை மதியாது, மாறுபட்டுச் செல்லுகின்றவர்களுக்கும், மறக்கருணை காட்டி அதற்குத் தேவையானவற்றைப் புரிந்து நலமே செய்கின்றார்.
அவர் தெளிந்த அமுதமாக உள்ளவர். அதன் தெளிவும், சுவையும் எதற்கு ஒப்பிடுவதோ? உலகம் கண்ட நல்ல தேனிலும், செம்பாகிலும், கோடியில் ஒரு பங்காவது அத் தெளிவும் சுவையும் காணமுடியுமோ?
சிற்சபையிற் பெருவாழ்வைச் சிந்தை செய்மின் என்கின்றார். அணுவினுள் அணுவாய் அருகி இருக்கின்ற சிற்சபையில் ஓங்குகின்றவர் நமது அருட்பெருஞ்ஜோதபதி. இச்சிற்றணு விடத்திருந்து கொண்டு, தனிப் பெருங்கருணையால் அகில உலகத்து எல்லா உயிர்களையும், பொருள்களையும் தவறாது நன்கு ஆண்டு கொண்டுள்ளளைர்.
“இந்த பதியைச் சிந்தை செய்து, வணங்கி, வாழ்த்தி இரண்டறக் கலந்து கொள்ள ஆணை செய்யப்படுகிறோம். இச்சிற்றம்பலத்தில் பொருந்தி இருந்து கொண்டு, பொன்னம்பலமாம் அகண்ட பெரு வெளியிற் பெரு வாழ்வு வாழ வேண்டியுள்ளதாம்”.
இக்கருத்தே, நமது ஆன்றோர் வழங்கிய ஒரு பழமொழியிலும் காண்கின்றோம். “சிறுகக் கட்டிப் பெருக வாழ்” என்பதுவே அப்பழமொழியாம்.
மேற்படி அம்பல வாழ்வு மேற்கொள்ளும் போது, ஊன்ஏயும் உடல் (அதாவது, அசுத்த புன்புலால் பொருந்திய தேகம்) நித்திய சுத்த அருட் ஜோதிக்கு இடம் கொடுத்து, அதுவாகி மாறி விடுகின்றதாம். இப்படி மாற்றமுறுவதாலே நமக்கு அருட் ஜோதி தேகம் சித்தித்ததாகும். இதுவே உத்தம சித்தியாம். அருட்பூரணத்தால் பெறப்படுவது இச்சித்தி.
மற்ற அருúளக தேசத்தால், மனோகரண, தேகேந்திரிய, ஜீவ முயற்சிகளளைலும், தந்திர, மந்திர, யந்திர விஞ்ஞான சாதனைகளளைலும் அடைகின்ற எல்லாவிதமான சித்திகளும் “மத்திம சித்தி” களளைகவே கொள்ளப்படும்.
இவையன்றி, காம குரோதாதிகளுடன் அசுர சாதனா தவ முயற்சிகளளைல் பெறப்படுகின்ற “அதம சித்தி” களளைல், நன்மைகளை விடத் தீமையே அதிகமாய் விளையக் காண்போம்.
“மனிதன் பக்குவப்படாத கீழ்நிலையில் கிடந்து
துன்பப்படுவதற்கு உண்மை அறியாமை, அன்பு
இல்லாமையே காரணமாம்”
ஆகையால், ஜீவ தயாவொழுக்கம் பூண்டு, அன்புப் பணியில் இறங்க வேண்டுவது, மனிதனின் முதற்கடமை, அன்புப்பணியில் ஈடுபட்டு, பரோபகாரம் ஓங்கும்போது, தன்னை மதியாமை, தான் என்ற அகங்காரம் கொள்ளாமை, நிராசையோடு கூடிய தயை உடமை எல்லாம் உண்டாகும்.”
அப்போதுதான், அதம சித்திகளை அறவே வெறுப்போம். மத்திம சித்திகளை மறந்தும் மதியோம். உத்தம சித்தி ஒன்றையே உளங்கொண்டு உய்வோம். திருவருளும் அதனை உவந்தருளும். இது சத்தியம் என்று அறிந்துகொள்ள வேண்டும்.
அறிவது மட்டுமல்ல, “சுத்தசத் விசாரத்தால் உள்ளுறக் கண்டு கொள்ளவும், கண்டதை நித்திய வாழ்வில் பெற்றுக் கொள்ளவும் வேண்டுமென்பதே திருவுள்ளத்தின் ஆணையுமாம்”.
Write a comment