சுவாமி சரவணானந்தா.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000
திரு அருட்பாப் பாடல்கள், சிறப்பாக, சுத்த சன்மார்க்கத்தை உலகுக்கு வெளியிட்டு மக்கள் சமுதாயம் முழுமைக்கும் நிலைத்த இன்ப வாழ்வை அடையச் செய்யவே வந்துள்ளனவாம்.
சுத்த நெறி என்பது, எவர்க்கும் உரிய ஒன்றான அருள் ஆண்டவரின் அனுபவ வாழ்வை உலகுக்குக் கொண்டு வருவதாகும். இது எந்த ஒரு சமய மதச் சார்பு கொண்டதல்ல; பொதுவாக எல்லோராலும் தயவோடு ஏற்று, வாழ்க்கையில் பெருநலம் காண உதவுவதாம். இத்தயா பொது நெறி, வடலூர்ப் பெருமான் இராமலிங்க அடிகள் மூலம் வெளியாக்கப் பெற்றுள்ளது. இவரோ, அருட்பெருஞ்ஜோதிக் கடவுளையே, தமிழ் கண்ட சிவத் தொடர்பு கொண்ட சைவ மரபு வழி, மெய்ப் பொருளை உலகெலாம் உணர்ந்தோதி இன்புற உபாயம் செய்துள்ளார். ஆகையால் இவரது திரு அருட்பாக்கள் பெருவாரியாக சிவஜோதியோடு திகழ்கின்றன. சுத்த சத் விசாரத்தால் உண்மை கண்டு, உள் நின்று நிறை தயவால், யாவரும் வாழவே ஆணை செய்யப்பட்டு உள்ளதாம்.
எனவே, திரு அருட்பாப் பாசுரங்களுக்கு உட்பொருள் கண்டு உலகம் உய்வு பெற வேண்டியுள்ளது. இங்கு திருக்கதவம் திறத்தல் என்ற சிறந்த ஒரு பதிகம் விரிவுரை செய்ய எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இத்தலைப்புக்குக் கீழ் ‘திருவருட் புகழ்ச்சி’ என்னும் குறிப்பு ஒன்றும் வழங்கப் பெற்றுள்ளது. இப்பதிகக் கருத்தினைப் புரிந்து கொள்வோம் முதலில்.
அனாதி நித்திய, அகண்ட பரிபூரண மெய்ப்பொருளே யாவரும் போற்றி அருட்பெரு நலம் பெற உள்ளதால் அப்பரம் பொருளே இங்கு அருட் பெருஞ் ஜோதியாக ஓதப்பெருகின்றது. ஒவ்வொரு செய்யுளிலும், மகுடமாக, ’சித்த சிகாமணியே என் திரு நட நாயகனே’ என்று புகழப் பெற்றுள்ளது. அதாவது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், திரு நட நாயகன் ஆக, நடராஜர் ஆகப் போற்றப்படுகின்றார். இந்த அருட் பெருஞ் ஜோதிபதி எழுந்தருளி இருப்பது சத்திய ஞான சபை ஆகும். இதன் திருமுன் உற்று நின்றுதான், இப்பாசுரங்களை உருக்கமாக ஓதி வேண்டப்படுகின்றது. புறத்தே வடலூர் ஞான சபையும், துதிக்கப்படுகின்ற பாடல்களையும் பாமர உலகம் அறியும். உண்மையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையோடு எழுந்தருளியுள்ளது, நம் உடலூரில் சத்திய ஞானம் விளங்கும் தலை ந்டு இடமாகும். ஆதலின் புருவ நடு மனம் ஒன்றி நின்று அகமுக நோக்கி வேண்டுதல் முறையாகும்.
இம்முறையீடு வேண்டுகையால் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு, உள்ளொன்றி நிற்றல்தான் அருட்பதியின் அருள்பெற்றதற்கு அடையாளமாம். அப்படி அக நிலையில், கலவாமற் கலந்து இருந்து கொண்டு, அந்த அனுபவம் கெடாது அருட் பெருஞ்ஜோதியின் தனிப் பெருந் தயவால் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் ஆண்டவரின் ஆணையும், மனிதப் பிறப்பின் முடிந்த ஆனால் முடிவற்ற நித்தியானந்த வாழ்வு நிலையும் ஆம்.
மேற்குறித்த லட்சியத்தை உளம் கொண்டு, இப் பத்து பாக்களின் விளக்கத்தை அருட்பெருந் துணையால் அறிந்து கொள்ளுவோம். பாக்களின் உபாய கற்பனா பொருள்களைக் கொண்டு, உள் விசாரத்தால் உண்மைப் பொருளையும் கண்டு, உட்கூடி உலைவற இருந்து கொண்டு நித்திய வாழ்வில் தயவு செய்து கொண்டு வாழ்வதே அனுபவத்தால் பெறும் பொருளாகும். மற்றபடி சொற்பொருளை வைத்துக் கொண்டு மகிழ்ந்தும். போராடியும், பொழுது போக்கிக் கொண்டிருத்தல் சரி அன்று.
இனி ஒவ்வொரு செய்யுளையும் எடுத்து ஆய்ந்து கொள்ளுவோம்.
(1)
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்ஜோதித் திருவுருக் காட்டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தென் உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே யாக்குறமெய் யுணர்ச்சியரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
(விளக்கம்)
“அருள் ஐந்தொழிலாம் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அரசே..நீ, ஆணவ, அகங்காரமற்ற, அமைதியுளம் பெற்ற, பக்குவர்களுக்குத் திருவருள் பாலிக்கவே, இந்தச் சித்திபுரம் என்னும் வடலூர் ஞான சபையில் எழுந்தருளியுள்ளாய். சித்தென்னும் மெய்ஞ்ஞான நிலை மேலே விளங்குபவனாயும், சித்தர் சித்தனாம் சித்த்னாதனாய் உச்சி மேற்கொள் ஒளி மணியாய்த் திகழ்கின்றாய். உன் திருச்சந்நிதி வந்து பணிந்து நின்று வேண்டுகின்றேன்” என்கிறார் வள்ளல் அடிகள்.
அவர்து வேண்டுகை என்ன ?
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
1. ஞானசபையின் வாயிற் கதவம் திறக்க வேண்டும்.
2. அகத்தே ஒளிர் அருட்பெருஞ்சோதியை மறைத்துக் கொண்டுள்ள எல்லாத் திரைகளையும் விலக்கி நீக்கிவிட வேண்டும். அப்படிச் செய்து ஜோதிக் காட்சியை நன்கு காட்டி அருள வேண்டும்.
3. இந்தப் புறக்காட்சியோடு, அகத்தே அமுத ஜோதிப் பெருக்கால் உடலும், உயிரும், உள்ளமும் ஒளிமயமான உணர்ச்சி நிரம்பச் செய்தலும் வேண்டும்.
4. பிறவா, இறவா என்றும் விளங்கும் நினது ஒப்பற்ற அருட்ஜோதி வடிவை என்னில் இரண்டறக் கலந்து எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்தல் வேண்டும் என்றெல்லாம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றார்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இவைகளை எல்லாம் அருள்வாயோ, வழங்குவாயோ எனக் கூறும்போது, நிச்சயம் அருள் செய்திடுவாய்..என்ற நம்பிக்கையின் பேரில்தான் ஐய வினா போல் வெளித் தோன்ற உள்ளத்து உறுதி தொனிக்க வேண்டுகின்றார் என அறியலாகும்.
இப்படி, கதவு திறத்தல், உள்ளொளி காட்டப் பெறல், அவ்வொளியோடு அத்துவிதமாய் நிற்றல், அங்ஙனமிருந்து சதானந்தத்தோடு வாழ்தல் இவையே இவர்தம் வேண்டுகையின் பயனாகும்.
இதுபோல், நாம் ஒவ்வொருவரும் அப்படிச் சிற்சபாத் துவாரமாகிய புருவநடு, ஒருமையோடும், உளநெகிழ்வோடும் இருந்து வேண்டி வேண்டி. உள்ளொளி கண்டு ஒன்றி நின்று அன்பருள் இன்ப வாழ்வு தழைக்க உலகிடை என்றும் விளங்குதல் வேண்டும் என்பதே அருட்பெரும்பதியின் திருவுள்ளமும் அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு ஆணையும் ஆம்.

Write a comment