Vallalar Universal Mission Trust   ramnad......
வரவுசெல வற்றபரி பூரணா காரசுக வாழ்க்கைமுத லாஎனக்கு வாய்த்தபொரு ளேஎன்கண் மணியே
வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
வாழ்க்கைமுத லாஎனக்கு
வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
வயங்கிஒளிர் கின்றஒளியே
இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
ரின்பமே அன்பின்விளைவே
என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
என்னாசை யேஎன் அறிவே
கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
கருணைஅமு தேகரும்பே
கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
கடவுளே கலைகள்எல்லாம்
விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
மெய்ம்மையே சன்மார்க்கமா
மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
மேவுநட ராஜபதியே.