Vallalar Universal Mission Trust   ramnad......
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.