Vallalar Universal Mission Trust   ramnad......
சழங்குடை உலகில் தளருதல் அழகோ தந்தையுந் தாயும்நீ அலையோ.
பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
மற்றொரு பற்றும்இங் கறியேன்
சழங்குடை உலகில் தளருதல் அழகோ
தந்தையுந் தாயும்நீ அலையோ.