Vallalar Universal Mission Trust   ramnad......
ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும் சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில் சரணம்
கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.