Vallalar Universal Mission Trust   ramnad......
சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே


சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.