Vallalar Universal Mission Trust   ramnad......
ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம் வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே
ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
தேவா கதவைத் திற.


ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.


ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே

ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி - அம்மா
என்னென்று சொல்வன டி. ஆணி
ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பம டி - அம்மா
இசைந்தபொற் றம்பம டி. ஆணி