Vallalar Universal Mission Trust   ramnad......
எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே கதைக்கின்றார்
மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.