பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய். வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
Write a comment