Vallalar Universal Mission Trust   ramnad......
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட் டால்அதுதான் கொலையாம் என்றே வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச் சொல்கின்றேன்
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
டால்அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
கஞ்சுவரே இழுதை யீரே.

 கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
சுடுகின்றீர் புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
துடியாதென் சொல்லீர் நும்மைத்
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.