Vallalar Universal Mission Trust   ramnad......
அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும் அப்பநீ அடியனேன் தன்னை விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
என்பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
பாவியேன் பிழைபொறுத் திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
உடம்பைவைத் துலாவவும் படுமோ
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
தெய்வத்துக் கடாதவன் என்றே.
 அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
அப்பநீ அடியனேன் தன்னை
விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
விடுதியோ விட்டிடு வாயேல்
உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
உன்னருள் அடையநான் இங்கே
படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
பாடெலாம் நீஅறி யாயோ.